சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நரம்பியல் தொழில்நுட்ப பிரிவின் மூலம் உலக மூளை தினத்தை முன்னிட்டு மூளை மற்றும் அதன் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக விம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாரி கொடையரசன் அவர்கள் பங்கேற்றார். துறையின் நரம்பியல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த மாணவர்கள் மேற்கூறிய விழிப்புணர்வை அனைவரும் எடுத்துரைக்கும் வகையில் கல்லூரி […]
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உலக மூளை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி.,
கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு எரியோடு பசியில்லா சங்கம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு பேனா பென்சில் எழுது பொருட்கள்..
கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு எரியோடு பசியில்லா சங்கம் சார்பாக தொட்டனம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் 170 பேருக்கும் மற்றும் அச்சம்பட்டி பள்ளி மாணவ மாணவிகள் 30 பேருக்கும் ஆக மொத்தம் 200 மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு பேனா பென்சில் எழுது பொருட்களை எரியோடு பசியில்லா சங்க பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் எரியோடு பசியில்லா சங்க பொறுப்பாளர்கள் தொட்டனம்பட்டி முஜீப் தனலட்சுமி,ஆறுமுகம் அப்துல்லா , எரியோடு கண்ணன், ரணதிவேல் , எஸ், வி.பி.சங்கர்,ஆட்டோ குமார்,ஜோதி,தர்மராஜ், ராஜபாண்டி,வேல்முருகன்,அச்சனம்பட்டி,பாண்டி, […]
முதுகுளத்தூரில் கபடி விளையாட்டை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார் ..,
முதுகுளத்தூர் பேரூராட்சி 9வது வார்டில் நடைபெற்ற கபடி விளையாட்டை தொடங்கிவைத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தில் இமானுவேல் சிலைவிரைவில் தனியார் இடத்தில் அமைக்கப்படும் எனவும், கன்னிராஜபுரத்தில் காமராஜர் சிலையும், கமுதி அருகே ராமசாமி பட்டியில் வீரபாண்டிய கட்டப் பொம்மன் சிலையும், முதுகுளத்தூர் தேவர் திருமண மஹால் கட்டப்படும் என கூறினார். 2800 கோடி குடிநீர் தேவைக்கு ஒதுக்கீடு. ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு 2800 கோடியை முதலமைச்சர் ஒதுக்கி கொடுத்துள்ளார். பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இனிமேல் நமது மாவட்டத்திற்கு […]
வளநாடு கிராம தரிசு நிலத் தொகுப்பில் வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு.,,
முதுகுளத்தூர் வட்டாரம் வளநாடு கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 14.47 ஏக்கர் தரிசு நிலத்தில் கடந்த ஆண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கருவல் முழுமையாக அகற்றப்பட்டு நிலம் சீர் செய்யப்பட்டு குதிரைவாலி பயிர் பயிரிடப்பட்டது. தற்போது வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றினை வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி அவர்கள் ஆய்வு செய்தார். பின்னர் தொகுப்பு தரிசு நில விவசாயிகளிடம் பேசிய அவர் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுக்கு […]
பயந்தவனுக்கு தினம் சாவு.. துணிஞ்சவனுக்கு ஒரு நாள் சாவு.. கவனம் ஈர்க்கும் சந்தானம் பட டிரைலர்!!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், […]
ரூ. 2 லட்சம் வரையிலான தள்ளுபடி – சிட்ரோயன் கார் வாங்க சரியான நேரம் இதுதான்!
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது பிளாக்ஷிப் கிராஸ்ஒவர், C5 ஏர்கிராஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. இவை ஜூலை மாதத்திற்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பலன்கள் 2022 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களுக்கு பொருந்தும், இவை ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல்- ஷைன் என்று அழைக்கப்படும் ஒற்றை, ஃபுல்லி லோடட் வேரியன்ட் ஆக கிடைக்கிறது. இந்த மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு […]
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் பவித்ரோற்சவம் தொடக்கம்..,
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அர்ச்சனைகள், பூஜைகள், திருவிழாக்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த சில தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக ஆகம சாஸ்திரப்படி பவித்ரோற்சவம் நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 3 நாள் பவித்ரோற்சவம் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக உற்சவர்களான சீதா, ராம, லட்சுமணர் விமான பிரகாரமாக யாக சாலைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. […]
விருத்தாசலம் விருத்தாம்பிகைஅம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது;-
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூர திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விருத்தாம்பிகை அம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவமூர்த்திகளான விநாயகர், விருத்தாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, விழா கொடியேற்றப்பட்டது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு […]
பத்து குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக அலுவலககண்காணிப்பாளரிடம் இஸ்லாமிய மக்கள் புகார் மனு..,
ராமநாதபுரம் வக்ஃபு சரகம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீரசோழன் இஸ்லாமிய உறவின் முறை டிரஸ் போர்டு ஜமாத் நலனையும் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் ஜமாத் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வண்ணம் தொடர்ந்து ஜமாத் விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறி சுமார் பத்து குடும்பங்களை ஊரை விட்டு ஜமாத் ஒதுக்கி வைப்பதாக ராமநாதபுரம் வக்ஃபு கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட குடும்பத்தினர் ராமநாதபுரம் வக்பு அலுவலகத்தில் கண்காணிப்பாளரிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கியுள்ளனர் மனுவில் குறிப்பிட்டு […]
அடையாறு அரிமா சங்கம் சார்பில் 30 லட்சம் மதிப்பில் ஐயப்பன்தாங்கல் அரசு பள்ளிக்கு வளர்ச்சி பணி தொடக்க விழா..,
சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சென்னை அடையாறு அரிமா சங்கம் சார்பில் சுமார் 30 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. சென்னை அடையாறு அரிமா சங்க தலைவர் வெங்கட்ராகவ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடையாறு அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர்.நிசான், சங்க பொருளாளர் ஜெயராமன், சங்க சேவை இயக்குனர் கண்ணன், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக ஐயப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஜமீலா பாண்டுரங்கன், முன்னாள் கவுன்சிலர் பாண்டுரங்கன், பெற்றோர் ஆசிரியர் […]