உலக காகித பை தினத்தை முன்னிட்டுமாணவர்களுக்கு விழிப்புணர்வு .,

ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் மேஜிக்பஸ்  தொண்டு நிறுவனம் சார்பில் பேரூராட்சியும் இணைந்து உலக காகித பை தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பொருட்களைகளை தவித்து காகித துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்து மாணவரக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.நிகழ்வில் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் என்.கே.எம்.சாகுல்ஹமீது,மழலையர் பள்ளி தாளாளர் என்.பைசல்அகமது,தலைமை ஆசிரியர் சுல்த்தான் அலாவுதீன்,உதவி தலைமை ஆசிரியர்கள் குரைசில்,ஜாகிர்உசேன்,நிறுவன மாவட்ட மேலாளர் சக்திவேல்,திட்ட கழிவு ஒருங்கிணைப்பாளர் கண்ணன்உள்பட ஆசிரியர்களும்,மாணவ,மாணவிகளும் கலந்து கொண்டனர்.

பருப்பு வகைகள், காய்கறி விலை உயர்வு- ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை மீண்டும் உயருகிறது…

தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் இருந்து ஓட்டல்களும் தப்பவில்லை. ஓட்டல்களுக்கு தேவையான காய்கறிகள், உணவு பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து விட்டதால் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 15 நாட்களாக உப்பு தவிர அனைத்து உணவு தானியங்கள், எண்ணெய், பருப்பு வகைகள் விலை கூடியுள்ளதால் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதால் ஓட்டல் உணவு பண்டங்களில் விலையை அதிகரிக்க வேண்டிய […]

115கிமீ ரேன்ஜ்.. ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிமுகமாகும் ஏத்தர் 450S

ஏத்தர் 450S மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 3-ம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஏத்தர் 450S மாடலின் விலை ரூ. 1.3 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சற்றே சிறிய பேட்டரி பேக் உடன் வழங்கப்படுகிறது. முந்தைய ஏத்தர் 450X மாடலில் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. புதிய ஏத்தர் 450S மாடலில் எல்சிடி டேஷ் வழங்கப்படுகிறது. இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு, ஒன் டச் வசதி வழங்கப்படவில்லை. சமீபத்தில் ஃபேம் 2 […]

இந்திய ஆப் ஸ்டோரில் இருந்து ஆறு செயலிகளை திடீரென நீக்கிய ஆப்பிள் – ஏன் தெரியுமா?

  ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தைக்கான ஆப் ஸ்டோரில் இருந்து தீங்கு விளைவிக்கும் கடன் செயலிகளை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த செயலிகள் வாடிக்கையாளர்களிடம் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த முறை பாக்கெட் கேஷ், வைட் கேஷ், கோல்டன் கேஷ் மற்றும் ஒகே ருபீ உள்ளிட்ட செயலிகள் அடங்கும். இந்த செயலிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து தேவையற்ற கட்டணங்களை வசூலித்து வந்ததாக, ஏராளமான பயனர்கள் ரிவ்யூ அளித்துள்ளனர். மேலும் கொடுத்த கடனை திரும்பி வசூலிக்க சட்ட விரோதமாக செயல்பட்டு வந்துள்ளது.கடந்த சில வாரங்களாக […]

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16-ந்தேதி திறப்பு;-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும். அதன்படி ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி […]

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி;-

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்கள் மற்ற பயன்பாட்டிற்கான நிலமாக அதிகம் மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் 48 சதவீதம் விவசாய நிலம் தற்போது 38 சதவீதமாக சுருங்கி விட்டது இதற்கு கடந்த 50 ஆண்டுகளில் இந்த இரண்டு கட்சிகளும் பாசன வசதிக்கு எந்த திட்டமும் கொண்டு வராததே காரணம். கர்நாடக சட்டப்பேரவையில் அணைக்கட்டு போகிறோம் என கூறியுள்ளனர். இரண்டு மாநில […]

ஆசாதி கா அம்ரித் மகோத்சன் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் புதுச்சேரி ECR சாலையில் உள்ள கடும்பாடி கிராமத்தில்   ஆசாதி கா அம்ரித் மகோத்சன் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.  இவ்விழாவில் மாவட்ட வன அலுவலர் – ரவி மீனா, திட்ட இயக்குநர் – M.S.சைதன்யா,தோட்டகளை வல்லுநர் – அருண், ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு திட்டத்தினை தொடங்கி வைத்தனர் இதில்ஒப்பந்ததாரர் – சுபா ராவ் மற்றும் மாவட்ட வனசரக அலுவலர்கள்உடன் இருந்தனர்.

கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு  ஏற்றும் திருவிழா.,

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் தண்டலம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு‌ ஏற்றும் திருவிழாவில் சிரசு ஊர்வலமும் ,பொங்கலிடுதலும், கூழ்வார்த்தலும், பக்தர்கள் நேர்த்திக்கடன்  செலுத்துதல் , கொக்ககளிக்கட்டை , சிலம்பாட்டம் குழுவினர்களின்  நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் தண்டலம் கிருஷ்ணாபுரம் கிராமம் ஊர் பொதுமக்கள் ,விழா குழுவினர்கள் ,பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். கெங்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிரசு  ஏற்றும் திருவிழாவில்  விழா  குழுவினர்களின் சார்பாக  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

ஆதிபராசக்தி மருத்துவமனை,மருத்துவ கல்லூரி நடத்தும் பொது இலவச மருத்துவ முகாம்..,

ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைவர் ஆன்மீக புரட்சி தலைவர் .கோ.ப.அன்பழகன் அவர்கள் தலைமையில்   ஆதிபராசக்தி மருத்துவமனை,மருத்துவ கல்லூரி மற்றும் தொழுப்பேடு கிராமம் இணைந்து நடத்தும் பொது இலவச மருத்துவ முகாம் தொழுப்பேடு  கிராமத்தில் நடைபெற்றது.இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவு சரிபார்க்கப்பட்டு பொது மக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. பொது மருத்துவம், குழந்தை நல மருத்துவம், மகப்பேறு மருத்துவம்,பல் மருத்துவம்.கண் மருத்துவம். ஆகியவை பொது மக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது இதில் சிவலிங்கம் ஊராட்சி மன்ற தலைவர்.புருஷோத்தம்மன் துணைத் தலைவர்.மற்றும் வார்டு […]

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத  ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில்   நடைபெற்ற  இசை நிகழ்ச்சி!!

வேலூர் மாவட்டம் ,வேலூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத  ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில்   நடைபெற்ற கும்பாபிஷேக விழாவின் தொடர்ச்சியாக சிவானந்த லஹரி ஆன்மீக பஜனையை சௌந்தர்ய லஹரி என்னும் குழுவினரால்  இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகம் விழாவினையொட்டி   நிலையில் நடைபெற இருக்கும் மண்டல அபிஷேக விழாவினை  முன்னிட்டு  பக்தர்கள் பஜனை செய்தனர்.  உமா விஜயசங்கர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்   சௌந்தர்ய லஹரி குழுவினர்   சுமார் 18-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிவானந்த லஹரி பாடல்களை பாடி மகிழ்ந்தனர் […]