டிராகன் பழத்தில் உள்ள மகத்துவம்.

கவர்ச்சிகரமான பழ இனங்களுள் ஒன்றாக காட்சி அளிக்கும் டிராகன் பழத்தின் பூர்வீகமாக மெக்சிகோ அறியப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா முழுவதும் பரவி இப்போது உலகம் முழுவதும் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இதனை பலர் விரும்பி ருசிக்க பழகிவிட்டார்கள். டிராகன் பழத்தை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்வோம். * டிராகன் பழத்தில் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலில் செல்களை சேதப்படுத்தும் ப்ரீரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன.* டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தக்கூடியது. […]

வட்டார விளையாட்டு போட்டிகளில் கீழ முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி முதலிடம்.

 நயினார்கோவில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் காரடர்ந்தகுடி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் 38 பள்ளிகளை சார்ந்த 1500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் . இதில் பரமக்குடி கீழமுஸ்லிம் மேல் நிலைப்பள்ளியை சார்ந்த மாணவர்கள் எறிபந்து வாலிபால் செஸ் தடைதாண்டும் ஓட்டம் வட்டுஎறிதல் ஈட்டி எறிதல் உயரம் தாண்டுதல் தொடர் ஓட்டம் மும்முறை தாண்டுதல் கம்பு ஊண்டி தாண்டுதல் டெனிகாய்ட் கபடி ஆகிய போட்டிகளில் பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவியரை தோற்கடித்து மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.        […]

தாசில்தார் சஸ்பெண்ட் விவகாரம்: மாவட்டவருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய கள்ளக்குறிச்சி  வட்டாட்சியர் மனோஜ் முனியன்   அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் ஆக.25 ல் தாலுகா அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  வட்டாட்சியரின் இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  காத்திருப்பு அறவழி போராட்டம் நடத்திய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள்,  ஊழியர்கள் கைது  நடவடிக்கைகளுக்கு கடும்  கண்டனங்களை தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது   காவல் துறை கைது நடவடிக்கைகளை கண்டித்தும், […]

7.70 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல்திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சரப்பாக்கம் ஒன்றியம் செம்பூண்டி ஊராட்சியில் பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான கலையரங்கம் கட்டித் தரக்கோரி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினரும் கோரிக்கை வைத்தனர் அதன் பேரில் மதுராந்தகம் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் 7.70 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டது கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு கலையரங்கத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அச்சரப்பாக்கம் வடக்கு […]

தென்காசி -ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவா்கள் தின விழா

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவா்கள் தின விழா மற்றும் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழாவும் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் சங்க தலைவா் கே.முருகானந்தம் தலைமை வகித்தாா். பொதுசெயலா் எஸ்.தங்கம் முன்னிலை வகித்தாா். சி.ஈஸ்வரமூா்த்தி, எஸ்.ஹரிகிருஷ்ணன், பி.உதயகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு பேசினா். கல்லூரி செயலா் முனைவா் ஜி.தேவராஜன், கல்லூரி முதல்வா் முனைவா் எஸ்.மீனாட்சி சுந்தா் வாழ்த்திப் பேசினா். கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் முதல்வா் முனைவா் ஆா்.வெங்கட்ராமன், தமிழ்த்துறை தலைவா் முனைவா் மேஜா் […]

தனி ஒருவன் 2 -அப்டேட் கொடுத்த மோகன் ராஜா.

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தனி ஒருவன். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார். ஹிப் ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தார். இன்றோடு இந்த படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை கொண்டாடும் வகையிலும், ரசிகர்களின் நீண்ட கால கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், தனி ஒருவன் 2 படம் பற்றிய […]

கியாவின் 3-வது எலெக்ட்ரிக் கார் – புதிய கியா EV5!

கியா நிறுவனம் கடந்த ஆண்டு தனது EV5 எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் வெர்ஷனை காட்சிக்கு வைத்தது. தற்போது இந்த மாடல் சீனாவில் நடைபெற்ற செங்டு மோட்டார் விழாவில் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-யாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கியா நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக புதிய EV5 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுமுன்னதாக கியா நிறுவனம் EV6 மற்றும் EV9 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்டைலிங்கை பொருத்தவரை கியா EV5 தோற்றத்தில் EV9 போன்றே காட்சியளிக்கிறது. இதில் அப்ரைட் பொனெட், டைகர்-நோஸ் முன்புற […]

கோலியை சீண்டி விடாதீர்கள்- எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு தெ.ஆ. முன்னாள் வீரர் எச்சரிக்கை.

இந்தியாவில் அக்டோபர் மாதம் 5-ந் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யாமல் இருப்பதே எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு நல்லது என முன்னாள் தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் மக்காயா நிடினி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- ஒரு பவுலராக விராட் கோலியை பற்றி உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில் அவரை திட்டி விடாதீர்கள். […]

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி 30-ந் தேதி (புதன்கிழமை) . காலை 10.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.05 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பவுர்ணமியையொட்டி வருகிற 30-ந் தேதி சென்னையில் இருந்து 250 பஸ்களும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் இருந்து 50 […]

கனிம வளங்களை பாதுகாக்க கோரி த.ம.மு.க சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்டம் சார்பாக தேனீ கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கை மனுவில் தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காற்றாடி மண் செம்மண் குவாரிகள் நடத்துவதற்கு குறிப்பிட்ட உரிமையாளர்களுக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் ,இந்த குவாரிகலிருந்து அரசு வழங்கப்பட்ட அளவைவிட அதிகமாக மண் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் ‘ஒரு நடைசீட்டை வைத்து பலமுறை அனுமதியின்றி கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது என்றும் […]