பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டம்- தமிழக நிருபர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்.

தமிழக நிருபர்கள் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கோரிக்கை மாநாடு பத்திரிக்கையாளர் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று சேலம் மாவட்டம் மேட்டூரில் நடைபெற்றது.இந்த மாநாட்டிற்கு தமிழக நிருபர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கு.இராசசேகரன் தலைமை வகித்தார்.  மாநில பொதுச் செயலாளர் ஜி.சிவக்குமார் வரவேற்று பேசினார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எம்.ராஜா, மாநில அமைப்பாளர் எம்.ஆர். ஆனந்தவேல், மாநில செய்தி தொடர்பாளர் எம்.பி.ஸ்ரீஇரவிச்சந்திரவர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அவினாசி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.சுரேஷ்குமார், மேட்டூர் வருவாய் […]

பாட்டாளி ஆட்டோ ஓட்டுனர் சங்க பெயர் பலகை மற்றும் கொடி நிறுவ மாற்றியிடம் கோரி மாவட்ட ஆட்சியரிடம்  மனு.

செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையின் திருமணி செல்லும் சாலையில் உள்ள நுழைவு வாயிலில் அருகே தற்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சூழல் அமைந்துள்ள இடத்திற்கு எதிரில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பமும் ஆட்டோ ஓட்டுனர் சங்க பெயர் பலகையும் வைக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல இடையூறாக உள்ளதாக தெரிவித்ததன் அடிப்படையில் அங்கிருந்த கொடிக்கம்பத்தையும் சங்கப் […]

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

தேனி அருகேயுள்ள பழனி செட்டிப்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் துணைத் தலைவர் மணிமாறன் முன்னிலையில் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 14 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் சுய உதவி குழு உதவியின் மூலமாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த தொகை மீதான விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க-வைச் சேர்ந்த 3 வது வார்டு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில்,  7 வது வார்டு உறுப்பினர் கணேஷ் பாபு, 12 வது வார்டு […]

புதிய ஆட்டோ பெர்மிட் வழங்குவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம். ராமேஸ்வரம் தீவுக்கு புதிய ஆட்டோ பெர்மிட் வழங்குவதை கண்டித்து ராமேஸ்வரம் தீவு ஆட்டோ ஓட்டுனர் 200 பேர்க்கு மேல் கலந்து கொண்டனர் 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீதி வேண்டும்-அட்டையை கழுத்தில் அணிந்து விவசாயி மனு.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பான்குளம் ஊராட்சி மைலப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பையா. இவர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்க வந்திருந்தார் அப்பொழுது நான் கடந்த 24/7/2023ல் தங்களிடம் நில அளவையர் எனது நிலத்தை அளக்காமல் இருந்த காரணத்தினால் தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோரை பாராட்டி டிஜிட்டல் பேனர் வைக்க அனுமதி கேட்டு இருந்தேன் எனவும் எனக்கு அனுமதி தராத காரணத்தினால் கடந்த 14/ 8/ 2023 ல் தங்களது அலுவலகத்தில் உள்ளிருப்பு […]

சேலம் மாவட்டத்தில் இந்திய குடியரசு கட்சி கவாய் பிரிவு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம் திருவள்ளுவர் சிலை அருகில் அமைந்துள்ள இந்திய குடியரசு கட்சி கவாய் பிரிவு அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பொண்ணுத்தம்பி செய்தியாளர்களை சந்தித்தார்! சேலம் திருவள்ளுவர் சிலை அருகே அமைந்துள்ள இந்திய குடியரசு கட்சி (கவாய் பிரிவு) அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பொண்ணு தம்பி  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது, சேலம் மாவட்டம் சேலம் வட்டம் குப்பனூர் வெள்ளையம்பட்டி கிராமம் 105/1A,105/2,105/3,105/4 ஆகிய சர்வே எண் உள்ளடங்கிய, ஏடி கண்டிஷன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு சேர்ந்த நிலத்தை  மாற்று இனத்தைச் சேர்ந்த ரத்தினவேல், மாரியம்மாள்,ராஜாமணி,ராஜா, ஆகியோர் 7 […]

தாசநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

சேலம் தாசநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி அரசு பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.மேலும் இப் போட்டியில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டனர்.வயது வரம்பு 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு  இரண்டு பிரிவுகளாக இப்போட்டி நடைபெற்றன.சேலம் திமுக கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி கே.சுரேஷ் குமார் அவர்கள் தலைமையில் இப் போட்டியை டாஸ் போட்டு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மற்றும் திமுக நிர்வாகிகள் சார்பில் சேலம் கிழக்கு […]

அ.தி.மு.க- பொதுக்குழு – தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அ.தி.மு.க- பொதுக்குழு சம்பந்தமாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி தலைமையில் ஆய்குடி பேரூர் கழக செயலாளர் முத்துகுட்டி முன்னிலையில் ஆய்குடி பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், பொருளாளர் சண்முகையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன், அச்சன்புதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் டாக்டர் சுசீகரன், பேரூர் […]

மதுரை மங்கையர்க்கரசி பொறியியல் கல்லூரியில் 5வது பட்டமளிப்பு விழா.

மதுரை பரவையிலுள்ள மங்கையர்க்கரசி பொறியியல் கல்லூரியில் 5வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் செயலாளர் பி.அசோக்குமார் தலைமையில் இயக்குனர் சக்தி பிரனேஷ் முன்னிலையில் நடைபெற்றது. அனைவரையும் வரவேற்று விழாவை திறம்பட வழிநடத்தினார். இந்த பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான சதாசிவம் கலந்து கொண்டுஅண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற அனைத்து துறை மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார். மேலும் கல்லூரியை சார்ந்த 270 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மாணவ மாணவியர்களுக்கு […]

சேலம் சேகோவுக்கான புவியியல் குறியீடு சான்றிதழ்.

சேலம் சேகோவுக்கான புவியியல் குறியீடு சான்றிதழ் சேகோசர்வ் தெற்கு ஆசியாவிலேயே மிக பெரிய தொழிற்கூட்டுறவு சங்கமாகும். சேகோசர்வில் 374 உறுப்பினர்கள் உள்ளார்கள். இந்தியாவிலேயே ஜவ்வரிசிக்கு என்று ஒரே ஒரு விற்பனை கேந்திரமாக சேகோசர்வ் சங்கம் செயல்பட்டு வருகிறது. ஜவ்வரிசியானது ஒரு பாரம்பரியமிக்க ஒரு உணவு பொருளாகும்.ஜவ்வரிசியானது வடமாநில மக்களால் புனிதமிக்க உணவு பொருளாக மிகமுக்கியமான நவராத்திரி, துர்காபூஜா போன்ற திருவிழா காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் சேகோவுக்கான புவியியல் குறியீடு சான்றிதழ், உணவுப் பொருள் வகைப்பாட்டு பிரிவு 30ன் கீழ் பெறப்பட்டுள்ளது. பழனி பஞ்சாமிர்தம், […]