வீரபாண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்பித்த சேர்மன்.,

தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கு விழா நடைபெற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமையில்நடைபெற்ற இந்த விழாவில் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்பித்தார் மேலும்பள்ளி மாணவர்கள் கல்வி விளையாட்டு தனி திறன்களில்பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்றும் மிதிவண்டிகள் பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவ மாணவிகளிடையே வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி […]

மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது- இயக்குனர் உத்தரவு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. பொது கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். 20 ஆயிரத்து 83 பேர் மருத்துவ இடங்களை தேர்வு செய்தனர். இட ஒதுக்கீடு இறுதி முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது. இடங்களை தேர்வு செய்தவர்கள் ஒதுக்கீட்டு ஆணை நாளை (6-ந்தேதி) முதல் பதிவிறக்கம் செய்யலாம். ஒதுக்கீட்டு கடிதம் பெற்ற மாணவ-மாணவிகள் 11-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படித்த 606 மாணவ-மாணவிகளுக்கு […]

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஹார்லி..! திடீர் அறிவிப்பு ;

; ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது X440 மாடலின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. புதிய விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. என்ட்ரி லெவல் மாடலான X440 விலை தற்போது ரூ. 2 லட்சத்து 29 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் என்று அதிகரித்துள்ளது. இதன் டாப் என்ட் மாடல்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம், ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் என்று மாறி இருக்கிறது.விவிட் என்று அழைக்கப்படும் மிட்-ரேன்ஜ் மாடலின் […]

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி- இந்தியா-மலேசியா  மோதல்..

7-வது ஆசிய சாம்பி யன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான்,சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டுக்கு ராபின் முறையில் ஒரு தடவை மோதும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் […]

தூய பனிமயமாதா பேராலய தங்கத்தேரோட்டம்- பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமயமாதா பேராலயம் தேர்திருவிழா மற்றும் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேர்பவனி நடைபெற்றது. தூய பனிமயமாதா பேராலயத்தின் 441-ம் ஆண்டு திருவிழா மற்றும் 16-வது தங்கத்தேர் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாள் காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் […]

மணிப்பூர் அரசை கண்டித்து வி.சி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல்,தேனி மண்டல செயலாளர் தமிழ்வாணன், தலைமை தாங்கினார்மாநகர மாவட்ட செயலாளர் மைதீன் பாவா,மாவட்ட செயலாளர் தமிழரசன் ,தமிழ்முகம் ,திருவளவன்,ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் மண்டல துணைச் செயலாளர் அன்பரசு வரவேற்றார் முன்னாள் மண்டல செயலாளர் தமிழ்வேந்தன் பலவித  கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை  நிகழ்த்தினார்ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் சம்பவத்தை தடுக்க தவறிய மணிப்பூர் பா,ஜ,க,அரசை கலைக்க வேண்டும் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை […]

பீரிமியர் லீக் கராத்தே போட்டியில் குளத்தூர் மாணவர்கள் சாதனை.

பிரீமியர் லீக் அளவிலான கராத்தே போட்டி தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வைத்து நடைபெற்றது.  இதில்  தமிழகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ-  இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர்  ரென்ஷி.   சுரேஷ்குமார் செயல்பட்டார். இதில்   தூத்துக்குடி மாவட்ட கராத்தே  செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் விளாத்திகுளம் தொகுதி குளத்தூரை சேர்ந்த  மாணவர்கள் பங்கேற்று கட்டா  பிரிவில் ரிஷி சவித் தங்கப் பதக்கத்தையும்,  ஸ்ரீ கிஷோர், கமலேஷ், நலன் வெள்ளிப் பதக்கத்தையும் மேலும் […]

கடலாடி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் களநீர் பயிற்சி முகாம்;

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில்  தகவல் தொடர்பு மட்டும் திறன் மேம்பாட்டு துறையின் ஜல் ஜின் மிஷின் திட்டத்தின் சார்பாக களநீர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். குடிநீர் வாரியத்தின் இணை பொறியாளர் வடிவேல், உதவி நிர்வாகப் பொறியாளர் முருகேசன், வட்டார வளர்ச்சி மேலாளர் முனியசாமி மற்றும்செந்தில் ஆகியோர்முன்னிலை வகித்தனர். அனைத்து ஊராட்சி கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களில் உறுப்பினர்களில் இருந்து ஐந்து பேரை தேர்வு செய்து அவர்களுக்கு […]

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் – தென்காசி போலீசார் அதிரடி.

தென்காசியில்  கூலக்கடை பஜார் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் தென்காசி காவல் ஆய்வாளர் கே.எஸ். பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் வெள்ளபாண்டி, காவலர்கள் சரவணகுமார்  அன்பரசன் சிவப்பிரகாஷ் ஆகியோர் செய்த சோதனையில் தென்காசி தைக்கா தெருவை சேர்ந்த சலீம் த/பெ சாகுல் ஹமீது என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 50 கிலோ எடையுள்ள சுமார் 41,000 மதிப்பிலான குட்கா பொருட்களை கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில் அவர் அதிக […]

பாட்டாளி மக்கள் கட்சி,வன்னியர் சங்கம் கொடி ஏற்று விழா..

சேலம் வடக்கு மாவட்டம் அயோத்தியாபட்டணம் கிழக்கு ஒன்றியம் கூட்டாத்துப்பட்டி ஊராட்சி ,செங்குட்டை  கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி,வன்னியர் சங்கம் கொடி ஏற்று விழா பாமக ஒன்றிய செயலாளர் செந்தில்குமார்   தலைமையில் நடைபெற்றது பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாராயணன், மாணவர் சங்க மாநில செயலாளர் வழக்கறிஞர். இரா.விஜயராசா,மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினர் மாவட்ட மாணவர் சங்க துணை தலைவர் சின்ராஜ்,பாமக ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன்,கிளை தலைவர் இராம்ராஜ்,குமார்,கௌதம், ஆகியோர் முன்னிலை […]