சேலம் முன்னாள் அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் கடந்த 2012ம் ஆண்டுசேலம் மத்திய குற்றப்பிரிவுபோலீசாரால் கைது செய்யப்பட்டார்.கண்டனம் தெரிவித்து, ஜெயலலிதா போலவேடம் அணிந்து கொண்டு கிண்டல் செய்ததாகவும், பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், கொடுத்தபுகாரின்பேரில் 4 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த டவுன் போலீசார் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.இதில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின்நேர்முக உதவியாளர் சேகர், அருள்மணி, சம்பத்,(கேசவன், கார்த்தி(எ) செந்தூர்கார்த்தி, திருநாவுக்கரசு,தனபால், ஜிலானிபாஷா, ராஜா, லோகு (எ)லோகநாதன், ‘ராஜேந்திரன், சேகர், மூர்த்தி, ராஜேந்திரன்,மணிகண்டன், பரமசிவம, விஜயசுரேஷ், நல்லதம்பி,சிவராஜ், கந்தசாமி […]
சேலம் மத்திய குற்றப்பிரிவுபோலீசாரால் கைது செய்யப்பட்டவர்-விடுதலை
கீழ் பவானி வாய்க்காலில் பாலம் கட்டும் பணியினை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் நேரில் சென்றுஆய்வு..
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் கீழ் பவானி வாய்க்காலில் பாலம் கட்டும் பணியினை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி மாவட்ட ஆட்சி தலைவர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது,90 மிலி பேக்கில் மதுவிற்பனை செய்வது மற்றும் மது கடை நேரம் மாற்றம் செய்வது குறித்து கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்,ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க பணிகள் […]
அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா..
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் ஜாப்ரபேட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் சிறப்பு அலங்காரமும், சிரசு ஊர்வலமும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தர்மகர்த்தா சந்திரசேகர், கே. வரதராஜன் பி. குப்புசாமி கே .பாரத், கிருபாகரன், ஆர் .குப்பன் யாதவ் ,எஸ் .மோகன், எஸ் .காந்தி, சக்கரவர்த்தி உடையார், தசரத செட்டியார் ,மணிகண்டன், ஜோதியப்ப செட்டியார் ,மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பீரிமியர் லீக் கராத்தே போட்டியில் ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள் சாதனை..
பீரிமியர் லீக் கராத்தே போட்டி தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜு ரியு கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் செயல்பட்டார். இப்போட்டியில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள் கட்டா பிரிவில் கிருஷ்ணசாமி தங்கப் பதக்கத்தையும் யாவின் வினோத் வெள்ளிப் பதக்கத்தையும் நேஹான் , சூரிய ஆகாஷ் வெண்கல பதக்கத்தையும் வென்று பள்ளிக்கு […]
புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக கண்டன ஆர்பாட்டம்..
புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சார்பாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆளும் திமுக அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வரவேற்புரை அம்பேத்கர் கலை நகர செயலாளர் வரவேற்புரை வழங்கினார் தலைமை C.Kமூர்த்தி மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கண்டன உரையில் OE ஷங்கர் மாவட்ட தலைவர் உரையாற்றுகையில் மணிப்பூர் மாநிலத்தில் என்னதான் நடக்கிறது.இதுவெறும் இனஇடஓதுக்கீடு பிரச்சினை தானா இதன் உள்நோக்கம் என்ன […]
மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து :அதிமுக பகுதி செயலாளர் நேரில் சென்று ஆறுதல்.
ஓசூர் எழில் நகர் எல் ஐ ஜி குடியிருப்பு பகுதியில் மேல் தளத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் தனியார் கம்பெனி ஊழியர் கதிரேசன் (50) இவரது மனைவி சம்சாத், இன்று வழக்கம்போல கதிரேசன் வேலைக்கு சென்று விட அவரது மனைவி அருகில் உள்ள உறவினர் ஒருவரை பார்க்க சென்றுள்ளார்.அப்போது மின் கசிவால் அவர்களது வீட்டில் உள்ள பொருட்கள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதுகுறித்துகதிரேசனுக்கும், ஓசூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு […]
தும்பிகுளம் கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை சிறப்பு முகாம்.
. கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு தமிழக அரசின் கால்நடை சிறப்பு முகாம் திருவாலங்காடு ஒன்றியம் தும்பிகுளம் கிராமத்தில் நடைபெற்றது. மண்டல இணை இயக்குனர் டாக்டர் செய்த்தூன் தலைமையில் நடைபெற்ற முகாமில் கால்நடை பராமரிப்பு துறை திருத்தணி கோட்ட உதவி இயக்குனர் டாக்டர்.ச. தாமோதரன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா கோபி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து அங்கு அடையாளப்படுத்தி இருந்த கால்நடைகளின் வளர்ச்சி. பராமரிப்பு […]
பள்ளிக்கு செல்ல பெற்றோர்கள் வற்புறுத்தியதால் மனம் உடைந்த மாணவன்- தூக்கு போட்டு தற்கொலை.
திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பிரவீன் குமார். வயது (11.) இவனது பெற்றோர்கள் பொதட்டூர்பேட்டை அருகே உள்ள பாண்டறவேடு கிராமத்தில் இயங்கும் புனித இதய மேல்நிலைப் பள்ளியில் படிக்க சேர்த்திருக்கிறார்கள். மேலும் அங்கேயே விடுதியில் தங்கி 6 ம் வகுப்பு படித்து வந்த நிலையில் சனி ஞாயிறு விடுமுறை என்பதால் வீட்டுக்கு வந்த மாணவனை அவனது அம்மா மீண்டும் பள்ளி விடுதிக்கு அழைத்துச் சென்று விட்டு வந்துள்ளார். ஆனால் மாணவன் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் திரும்பவும் வீட்டுக்கு […]
தனியார் பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து;
சென்னை, அடுத்த மணலியில் ஆண்டார்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீஞ்சூர், மணலி தீயணைப்பு துறையினர் விரைந்தவர். தீயணைப்பு வீரர்கள் முன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் சுவாச பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி-அதிமுக மாவட்ட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி ராமநாதபுரம் கலெக்டர் ஆட்சியரக நுழைவு வாயில் முன் அதிமுக மாவட்ட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர் எம்.பி ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.அமமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.தொகுதி செயலாளர் நவநாதன், மூக்கையா, ராமகிருஷ்ணன், முத்துப்பாண்டி, மாவட்ட துணை செயலாளர் கற்பகம் பழனிச்சாமி, இணைச்செயலாளர் சித்ரா, பொருளாளர் பாலசுப்பிரமணியன் […]