காவல்துறை சார்பில் “தேசிய ஒற்றுமை நாள்” உறுதி மொழி ஏற்பு!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் இன்று “தேசிய ஒற்றுமை நாள்” உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31ம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர்  அந்தோணியம்மாள் உட்பட காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரிகள்  […]

காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சொந்தமான இடத்தை அற நிலையத்துறை  மீட்க வேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடைபெறும் இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி ;

மதுராந்தகம் அருகே உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சொந்தமான இடத்தை அறநிலையத்துறை மீட்க வேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி ; செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூர்  கடப்பாக்கம் பகுதியில் உள்ள இந்துமுன்னணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் வீட்டிற்கு வருகை தந்த இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பரமணியம் வருகை தந்தார் அப்பொழுது கடப்பாக்கம் பகுதியில் உள்ள பழம்பெறும் திருத்தலமான காசி விசுவநாதர் ஆலயத்திற்கு சொந்தமான இப்பகுதியில் உள்ள 19 ஏக்கர் நிலத்தை மீட்க பல்வேறு […]

ஏசிஎஸ் மருத்துவமனை கல்லூரி சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்;

வேலூர் மாவட்டம், வேலூர் கொணவட்டம் மற்றும் ரங்காபுரம் ஆகிய இடங்களில் ஏசிஎஸ் மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமினை ஏ,.சி.சண்முகம் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏ.சி.எஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகள் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமினை புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்  அவர்கள் துவக்கி வைத்தார்.இம்முகாமில் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை, அறுவை சிகிச்சை,தோல் நோய்களுக்கான சிகிச்சை காது, மூக்கு ,தொண்டை ,உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் […]

நலிவடைந்த பெண்ணிற்கு மாவட்ட ஆட்சியர் நிதி உதவி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், ஈயனூர் கிராமத்தைச் சேர்ந்த சத்யா கணவர் பாலமுருகன், பாலமுருகன் மூன்று மாதத்திற்கு முன்பு கட்டிட வேலை பார்க்கும்போது விபத்தில் இறந்து விட்டார். தற்போது சத்யா இவர்களுக்கு ஹேமலதா, பூர்விகா, செந்தமிழ், செல்வரசி, ஜனனி என ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது எதிர்காலம் பிள்ளைகளின் கல்வி, பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. தனது 5 பெண் பிள்ளைகள் தங்குவதற்கு ஏற்ற வீடு இல்லை என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை நேரில் அழைத்து […]

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிஅ.தி.மு.க. தேர்தல்பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

அத்தாணியில் உள்ள சரஸ்வதி மஹால் திருமண மண்டபத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பூத் கமிட்டி ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும்,ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி, பண்ணாரி எம்.எல்.ஏ.முன்னாள் எம்பிகள் காளியப்பன்,சத்தியபாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுப்பது. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், பிழை திருத்தல் போன்ற பணி களில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஈடுபடுவது,’ […]

சிறார்களுக்கு அதி நவீன ஆஞ்சியோகிராம் சிகிச்சை: அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல்முறையாக மூன்று சிறார்களுக்கு அதி நவீன ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.  இது தொடர்பாக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய பிரிவில், இருதய ரத்தக்குழாய் நுண் சிகிச்சை ஆய்வு கூடம் (கேத்லேப்) ஆரம்பித்து கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாரடைப்பு நோயாளிகளுக்கான ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி stent சிகிச்சை கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக செய்யப்பட்டு,சுமார் 3000-க்கும் மேற்பட்டவர்கள் பயன் […]

நாங்குநேரி வரைவு வாக்காளர் பட்டியலை தாசில்தார் விஜய் ஆனந்த் வெளியிட்டார்!

    நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை நாங்குநேரி தாசில்தாரும், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான மோ.விஜய் ஆனந்த் வெளியிட்டார்.     இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, இந்திய தேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளின் பிரதிநிதிகளும், தேசிய மக்கள் சக்தி […]

மகளிர் சுய உதவிக் குழு கடன் உட்பட ரூ 32 கோடி ரூபாய் கடன்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூட்டுறவு துறை மூலம் சிறப்பு கடன் வழங்கும் விழா நன்னகரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ச்செல்வி போஸ் முன்னிலை வகித்தார். தென்காசி மண்டல இணைப்பதிவாளர் கு.நரசிம்மன் வரவேற்புரை நிகழ்த்தினார். தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன் உட்பட ரூ.32 கோடிக்கு பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கி விழாவில் கீழ்க்கண்டவாறு உரை நிகழ்த்தினார்.மாவட்ட ஆட்சித் தலைவர் நிகழ்த்திய பேரூரையில் விவசாயிகள், நகர்ப்புறமக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய நலிவுற்ற […]

போதை ஒழிப்பு மற்றும் பாலியல் சீண்டல் குறித்த விழிப்புணர்வு பேரணி.

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் சீண்டல் சம்பவங்களாலும் போதை வஸ்துக்கள் அதிகரித்து காணப்படுவதாலும் இதனை தடுக்கும் வண்ணம் பழவேற்காடு ஜகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போது பயிலும் பள்ளி மாணவர்கள் இணைந்து போதை ஒழிப்பு மற்றும் பாலியல் சீண்டல் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இதில் பழவேற்பாடு பகுதியில் இயங்கி வரும் ஜகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப்பள்ளி,செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி,நேஷனல் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி,ஜமீலாபாத் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் […]

பகவான் மகாவீர் தயாநிக்கேத்தன் ஜெயின் பள்ளியின் 28வது விளையாட்டு சந்திப்பு நிகழ்ச்சி;

வேலூர் மாவட்டம் ,வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் பகவான் மகாவீர் தயாநிக்கேத்தன் ஜெயின் பள்ளியின் 28வது விளையாட்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கௌதமன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார் .உடன்,வாணியம்பாடி ஸ்ரீ மருதர் கேசரி ஜெயின் டிரஸ்ட் தலைவர் விமல்சந் ஜெயின், மற்றும் செயலாளர் லிக்மிசந் ஜெயின், பள்ளியின் முதல்வர்  மாலதி, ஆசிரியர்கள் ,மாணவர்கள், பெற்றோர்கள், பலர் கலந்து கொண்டனர்.