திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான என் மண் என் தேசம் நிகழ்ச்சியின் செயல்பாடுகள் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் சரித்திர புகழ் வாய்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த பகுதியிலிருந்தும் மிகப் பழமை வாய்ந்த ஆலயங்களில் இருந்தும் மண்ணை சேகரித்து அதனை ஒரு குவளையில் எடுத்து பூஜை, புனஸ்காரம் செய்து அதனை சென்னை கமலாலயத்தில் ஒப்படைத்து பின்னர் இந்த கலசங்களை நரேந்திர மோடி அவர்களிடம் 31.10.23 அன்று ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம். […]
பாரதி ஜனதா கட்சி சார்பில் ”என் மண் என் தேசம்” நிகழ்ச்சி;
தி.மு.க. விவசாய அணிதுணை அமைப்பாளர்களாக மீண்டும்பொறுப்பு ஏற்கும் கடத்தூர் பள்ளிக்கூடம் பிரிவு ஆர்பிஎஸ் பழனிச்சாமி.
ஈரோடுவடக்குமாவட்டம் தி.மு.க. விவசாய அணிதுணை அமைப்பாளர்களாக மீண்டும்பொறுப்பு ஏற்கும் கடத்தூர் பள்ளிக்கூடம் பிரிவு ஆர்பிஎஸ் பழனிச்சாமி, டி.சி.மணி, சாமி ஸ்ரீபிரியா நினைவு இல்லம்,கமலா ரைஸ்மில் வீதி,புதுப்பாளையம்.கோபி. ஆகியோர் தி.மு.க .வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் அவர்களுக்கு வீரவாள்வழங்கி ஆளுயுர மாலை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர்-அருகில் நம்பியூர்ஒன்றிய கழகச் செயலாளர்மெடிக்கல் செந்தில் குமார் மற்றும்முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் மைக் பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
டி.ஜே.எஸ்.கல்வி குழும்பத்தில் வித்தியாரம்ப நிகழ்ச்சி ;
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயில் அமைந்துள்ள டி.ஜே.எஸ் கள்ளிக்குடும்பத்தில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. அதில் டி.ஜே.எஸ்.மெட்ரிக் பள்ளி மற்றும் டி.ஜே.எஸ் பப்ளிக் பள்ளி இணைந்து விஜயதசமியை முன்னிட்டு வித்தியாரம்ப நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய மாணவர்களுக்கு கையைப் பிடித்து அரிசியில் எழுதி பள்ளியில் சேர்த்துக் கொண்டனர். முன்னாதாக பள்ளி மாணவர்கள் வரவேற்பு நடனம் யோகா ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர் பின்னர் இறுதியாக புதிய மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் டிஜேஎஸ். கல்விக்குழும தலைவரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே. கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். உடன் டி.ஜே.எஸ் […]
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர். தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மில்லர்புரத்தில் இன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாகப் பொறியாளர் ராஜா, உதவி நிர்வாகப் பொறியாளர் ஜான் செல்வம், இளநிலை குடிநீர் பகுப்பாய்வாளர் வினோத்குமார், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மரியஜோசப் […]
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா 2023-2024 விளையாட்டு போட்டி;
செங்கல்பட்டு மாவட்டம், புனிதசூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா 2023-2024 விளையாட்டு போட்டிகளைநாடாளுமன்ற உறுப்பினர் .க.செல்வம் அவர்கள் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற.இ.கருணாநிதி ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத், தலைமையில்உறுப்பினர்மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் .தா.மோ.அன்பரசன்அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் .தேன்மொழிநரேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) .வெ.வெற்றிசெல்வி, முதன்மை கல்வி அலுவலர்அவர்களின் நேர்முக உதவியாளர் .உதயகுமார், செயலாளர் .சிவகுமார், மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) .செல்வகணேசன், […]
தற்கொலை செய்து கொள்வதற்காக கீழ்பவானி வாய்காலில் குதித்த மூதாட்டியை உயிருடன் காப்பாற்றிய பொதுமக்கள்..
சேலம்மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் குஞ்சம்மாள் வயது 62 இவரது மகள் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சீதாலட்சுமி புரத்தில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடல் நலம் சரியில்லை என்ற தகவலை அறிந்த குஞ்சம்மாள் தனது மகளை பார்க்க கோபி வந்துள்ளார். அப்போது அவரது மகளும் அவரது கணவரும் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடப்பதை கண்ட வேதனையில் குஞ்சம்மாள் செய்வதறியாது மகளின் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் செல்லும் சாலையில் உள்ள கீழ்பவானி வாய்காலுக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் தண்ணீரில் […]
அயோடின் பற்றாக்குறை ஒழிப்பு விழிப்புணர்வு தின விழா;
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரம் அழகன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக அயோடின் பற்றாக்குறை ஒழிப்பு தின விழா நடந்தது. உணவு பாதுகாப்பு துறை ,ஆணையர் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தல் படி, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் வழிகாட்டல் படி அழகன்குளம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ராமநாதபுரம் நகராட்சி, மண்டபம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் ஏற்பாட்டில் பிறப்பு, இறப்பு வரை நம் அன்றாட வாழ்வில் தேவைப்படும் அயோடின் பற்றாக்குறை ஒழிப்பு […]
ஆண்டிபட்டி அருகே பனைவிதை நடும் விழா நடைபெற்றது.
ஆண்டிபட்டி அருகே க.விலக்கு -கண்டமனூர் சாலை பந்துவார்பட்டி விலக்கு பகுதியில் அமைந்துள்ள குளத்துக்கரையில் அர்ப்பணம் மதுபோதை & விழிப்புணர்வு மறுவாழ்வு மையம் மற்றும் சுருளிப்பட்டி சங்கமம் அறக்கட்டளை இணைந்து பனை விதை நடும் விழா நடைபெற்றது .ஆண்டிபட்டி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் TRN வரதராஜன் தலைமையில் பனை விதை நடும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி பனைவிதை நடும் விழாவை தொடங்கிவைத்தார். அர்பணம் மதுபோதை மற்றும் விழிப்புணர்வு மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் சதிஷ், வரவேற்புரையும், இணை இயக்குனர் வனிதா சதீஸ் , […]
பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி ;
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் இயற்கையை பாதுகாக்கும் வண்ணமும் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் அறவே மக்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குட் ஷப்பர்ட் பள்ளி மாணவ மாணவிகளால் நடத்தப்பட்டது. அதன் பின்பு தெருத்தெருவாக சென்று பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் தீமை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உசேன் துவக்கி வைத்தார் துணைத் […]
கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வீ. கூட்ரோடு கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 25.10.2023 அதிகாலை 01.40 மணியளவில் நைணார்பாளையம் அருகில் உள்ள V.கிருஷ்ணாபுரம் அருகே வி.அலம்பளம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி வயது (40) த/பெ ராஜேந்திரன் என்பவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலை, கால்கள் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். கீழ்குப்பம் காவல் நிலைய போலீசார் பிரேதத்தை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.