திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்துக் கூட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமை தாங்கினார். செயலாளர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் தயாரிக்கப்படும் இன்ஜின்கள் ராக்கெட்டில் பொருத்தி பயன்படுத்தப்படுகிறது. எனவே தொழில்நுட்பக் கல்வி படிக்கும் மாணவ- மாணவிகள் விண்வெளி தொடர்பான கூடுதல் தகவலை அறிந்து கொள்ளும் வகையில் மகேந்திரகிரி “இஸ்ரோ மையம்” சார்பில் அந்தப் பகுதியில் […]
மகேந்திரகிரியில்இஸ்ரோ “தொழில்நுட்பக் கல்லூரி” அமைக்க மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் தீர்மானம்!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீட்டா பாபு மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு;
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழக்குன்றம் நென்மேலி ஊராட்சியில் சைந்தவி அடுக்கு மாடி குடியிருப்பு ஜி12 பிளாக் 2ல் வசித்து சீட்டாபாபு என்பவர் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து அரசு அலுவலர்களையும் எந்த வித முகாந்திரமும் இன்றி வாட்சப் குழு அமைத்து அவதூறான செய்திகளை பரப்பி வருகிறார் எனவும் ஆன்டிக் கரப்ஷன் என்ற குழுவை அவரே அமைத்து கொண்டு அனைத்து அரசு ஊழியர்களையும் அதில் இணைத்து கடுமையான பொய் புகார்களை பரப்பி மன உளைச்சலுக்கு ஏற்படுத்தி வருகிறார். எனவும் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் லஞ்சம்வாங்குவதாக […]
குழந்தை பாதுகாப்பு குழுவின் தலைவராக சீவாடி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அரங்கநாதன் தேர்வு
செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியம் சீவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறையின் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு சார்பில் சீவாடி ஊராட்சியில் கிராம அளவிலான பாதுகாப்பு குழு நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்த விளக்க உரை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சீவாடி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் ச. அரங்கநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூக பாதுகாப்பு துறையின் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் புறத்தொடர்பு பணியாளர் ரோஜா அவர்கள் கலந்து […]
நிலம் வாங்குவோர், விற்போர் சங்க கூட்டத்தில் சாகும் வரை உண்ணாவிரத முடிவு.
மாவட்டத்தில் பத்திரப்பதிவு விதிமுறைகளில் தளர்வு செய்யப்படாத பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நிலம் வாங்குவோர், விற்போர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமை நடந்தது செயலாளர் பாண்டியன், பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொருத்தவரை நிலப்பரப்பு குறைந்தும், மக்கள் தொகை அதிகமாகவும் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் குறைந்த பட்சம் 5 சென்ட் நிலங்களில்தான் வீடு கட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த மாவட்டத்தில் கடந்த சில […]
சிக்கல் கிராமத்தில் குடிநீர் கேட்டு சாலைமறியல் அதிகாரிகள் சமரசம்;
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சி குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் சமரசம் செய்தும் ஏற்காததால் சிக்கல் போலீஸ் ஸ்டேசனில் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.சிக்கல் நெடுஞ்சாலையில் நடைபெற்ற காலை மறியல் போராட்டத்திற்கு தாலுகா இ கம்யூனிஸ்ட் செயலாளர் அம்ஜத்கான் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மவெட்ட செயற்குழு மயில்வாகனன், முத்துராமு ஆகியேரர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர கே.பக்கமால் அனைவரையும் வரவேற்றார். கடற்கரை சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சமரச […]
9வது தேசிய அளவிலான சப் ஜூனியர் மற்றும் 2வது மிக்ஸ்டு சப் ஜூனியர் இலக்குப்பந்து போட்டியில் பதக்கத்தை திருவண்ணாமலை மாணவர்கள் வென்றனர்
9வது தேசிய அளவிலான சப் ஜூனியர் மற்றும் 2வது மிக்ஸ்டு சப் ஜூனியர் இலக்குப்பந்து போட்டியானது மகாராஷ்டிரா மாநிலம் சாய் நகர், ஷீரடியில் நடைபெற்றது. இதில் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஹரியானா, தெலுங்கானா, குஜராத், மற்றும் மத்திய பிரதேஷ் ஆகிய 14கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து இலக்குப்பந்து வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியானது 02 அக்டோபர் 2023 முதல் 06 அக்டோபர் 2023 வரை நடைபெற்றது. இதில் 2வது சப் ஜூனியர் கலப்பு பிரிவில் தமிழக அணி […]
தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்;
சேலம் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இணை ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தலைமை தாங்கி நடத்தினார். இதில் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி, இணை ஒருங்கிணைப்பாளர் சந்திரன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் ,போலி ஆவணங்கள் தயாரித்து பத்திர பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக கொடுக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் […]
கோட்டை மாரியம்மன் கோவிலில் தமிழ் வழியில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு;
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் தமிழ் வழியில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .தமிழ் குடமுழுக்கு கூட்டு இயக்கத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி தலைமையில் சூலாயுதம் ஏந்தி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் அனைத்து கோவில்களிலும் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று தமிழ் ஆன்மீக மற்றும் அமைப்புகள் சார்பில் விருப்ப கடிதங்களை இந்து சமய […]
ஏலியம்பேடு மகேந்திரா சிட்டியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம்,ஏலியம்பேடு மகேந்திரா சிட்டிவளாகத்தில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது.இதில் மாவட்டம் முழுவதும் 200 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.14 மற்றும் 16 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற சைக்கிள் போட்டியானது மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்நரசிம்மராவ் முன்னிலையில் மகேந்திரா சிட்டி தொழிற் பூங்கா பொது மேலாளர் முகுல்ராயன் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக டிஜே கல்வி குழும தாளாளர் தினேஷ் மற்றும் பெருவாயல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர்,ஏலியம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இதில் […]
தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வார விழா.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சேலம் மாவட்டத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வார விழா மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம் தலைமையில் நடைபெற்றது .இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சின்னக்கடை வீதி வழியாக சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் முடிந்தது. இதில் ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் […]