குட்கா விற்கப்படுகிறதா? கடைகளில் காவல் துறையினர் அதிரடி சோதனை;

தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக குட்கா விற்பனையை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமார்,  உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 29 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளிலும் குறிப்பாக பல்வேறு பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே அமைந்துள்ள கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகின்றதா? என மாவட்டம் முழுவதும் இன்று 226 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து 152 காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகள் உட்பட […]

சாம்பவர்வடகரையில் அதிகாலையில் பயங்கரம் தந்தையை கல்லால் அடித்து கொலை – மகன் கைது;

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை சாலை விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி  (74) இவருக்கு செண்டு என்ற மனைவியும் 2 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் உள்ளனர் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.     இவரது மகன் சக்திவேல் (45) என்பவர் அதே பகுதியில் ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார் இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.     சக்திவேல் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவருகிறது இதற்கு திருநெல்வேலி மருத்துவ […]

வேலூர்  மாணவர்கள் தமிழ்நாடு மாநில அளவிலான மல்யுத்த போட்டியில்  பதக்கங்களை வென்று சாதனை ;

வேலூர் மாவட்டம் ,வேலூர்  மாணவர்கள் தமிழ்நாடு மாநில அளவிலான மல்யுத்த போட்டியில்  பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.தமிழ்நாடு அமைச்சர் மல்யுத்த சங்கம் நடத்திய மாநில அளவிலான அண்டர் 12 மல்யுத்தம் போட்டியானது   எம். லோகநாதன் ,   தென்னிந்திய மல்யுத்த சங்கதின் பொருளாளர், தமிழ்நாடு அமைச்சூர் மல்யுத்த சங்கத்தின், பொதுச் செயலாளர்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது .இதில்  ஸ்போர்ட்ஸ் அகாடமி… (மல்யுத்த தற்காப்பு கலை பயிற்சி மையம்) – வேலூர் மாணவர்கள் வேலூர்  மாவட்டம் சார்பாக   பங்கேற்று  பதக்கங்களைக் பெற்றுள்ளனர்..  வெங்கடாபுரம் ஊராட்சி தலைவர் பாபு […]

சின்னசேலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை:

     கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், நைணார்பாளையம் அருகே உள்ள பேக்காடு மெயின் ரோட்டில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வி – சிவக்குமார் தம்பதியினர். இந்நிலையில் தமிழ்ச் செல்வி கடந்த 20.11.2023 அன்று தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள வயலுக்கு மாடு மேய்க்கச் சென்று வீடு திரும்பகையில் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்து, உள்ளே சென்று பொருட்களை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தங்களுக்கு சொந்தமான 19 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது. இதனால் […]

குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் :ஓசூர் மாநகராட்சி நடவடிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் பாரதியார் நகர் பகுதியில், பஸ் நிறுத்தம் அருகே சீனிவாசன் என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.இந்த கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்துள்ளதாகவும், எனவே இந்த கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஓசூர் அட்கோ காவல் நிலையத்திலிருந்து, மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.இதையடுத்து, ஆணையாளர் சினேகா உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகர் தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர் கிரி மற்றும் பணியாளர்கள், அட்கோ சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் […]

பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் ;

கோவை மாவட்டம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல் துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் IPS  பொறுப்பேற்ற பிறகு தமிழக முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல்  சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டதன் பேரில்  பொள்ளாச்சி குடிமைப் பொருள்  வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் கோயம்புத்தூர் to கோவை புதூர்  அருகே வாகன தணிக்கை செய்து  கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த TN 66  E  3151 […]

கோவையில் இலவச டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வு வகுப்புகள் 100 பக்கங்கள் கொண்ட கையேடு  வினாவங்கி;

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள விவேகானந்தா ஐஏஎஸ் அகாடமியில் வருகின்ற நவம்பர் 26,2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் I,II & IV போட்டித் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் இலவச Current Affairs வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் ஆகஸ்ட் 2023க்கான நடப்பு நிகழ்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது.  மேலும் இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் போட்டித் தேர்வர்களுக்கு 100 பக்கங்கள் கொண்ட இலவச கையேடு புத்தகமாகவும், […]

காயிதே மில்லத் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர் ஏ.முகம்மது முஜாஹித் “டேக்வாண்டோ” போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று முதலிடம்,மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காயிதே மில்லத் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஏ.முகம்மது முஜாஹித். இவர் திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவில் 14வயதிற்கு உட்பட்ட இளையோர் பிரிவுக்கு நடந்த “டேக்வாண்டோ” போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்று முதலிடத்தைப் பெற்றார். தொடர்ந்து சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.     சிறப்பிடம் பெற்ற மேலப்பாளையம் காயிதே மில்லத் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர் ஏ.முகம்மது முஜாஹித்தை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், பள்ளியில் சந்தித்து […]

திருச்சி என்.ஐ.டி யில் அமெரிக்காவின்  இல்லினாய்ஸ் டெக் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மத்திய கல்வி நிறுவனமான திருச்சி என்ஐடியில் மாணவர்களுக்கு பலனளிக்க கூடிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பயிற்சிகள், கருத்தரங்குகள், புதிய கற்றல் தேடல், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை செய்து வருகின்றன.  அந்த வகையில் திருச்சி என்.ஐ.டியில்  அமெரிக்காவின் இல்லினாய்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான கையெழுத்து இடும்  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி மற்றும் டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நூண்ணறிவு ஆகியவற்றில் அதிநவீன ஆன்லைன் பட்டம் பெறுவதற்கான அம்சங்கள் உள்ளன. […]

கிணத்துக்கடவு ஒன்றிய  அலுவலகத்தில் ஜல்ஜீவன் மிஷின் கிராம குடிநீர் பணியாளர்களுக்கு 1 நாள் பயிற்சி நடைபெற்றது;

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றிய  அலுவலகத்தில் ஜல்ஜீவன் மிஷின் கிராம குடிநீர் மற்றும் சுகாதாரமான குடிநீர் சம்மந்தமாக கோதவாடி ,கொண்டம்பட்டி, கோடங்கிபாளையம்,குளத்துப்பாளையம் மற்றும் கோவில்பாளையம் போன்ற 5 ஊராட்சிகளுக்கு ஊராட்சிமன்ற தலைவர்,செயலாளர் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர் மற்றும் குடிநீர் பணியாளர்களுக்கு 1 நாள் பயிற்சி நடைபெற்றது. இதில் DRDA சச்சினாந்தம் மற்றும் ரவிக்குமார் பயிற்சி அளித்தனர்.இறுதியில் ஒன்றிய அலுவலர் மாரியம்மாள் முன்னிலையில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இறுதியில்   ஊராட்சி மன்ற தலைவர்,செயலாளர் சுயஉதவிக்குழு உறுப்பினர் மற்றும் குடிநீர் பணியாளர்கள் உடன் இருந்தனர்