ஹிஸ்டரி டிவி 18-ன் புத்தம் புதிய சீசன் ‘இந்தியா: மார்வெல்ஸ் & மிஸ்டரீஸ் வித் வில்லியம் டால்ரிம்பிள் இல், பிரமாண்டமான பிரகதீஸ்வரர் கோயிலின் புதிரான மர்மங்களைக் ஜனவரி 5 அன்று காணுங்கள்!

தஞ்சையின் பிரமாண்டமான பிரகதீஸ்வரர் கோயில், அதன் சுவர்களுக்குள் பல நூற்றாண்டுகள் பழமையான ரகசியங்களையும், பழங்கதைகளையும் மறைத்து வைத்துள்ளது. ஆனால் அதை அருகில் கவனித்தால் பல விடைகளை வெளிக்கொணர்கிறது. சென்னையிலிருந்து சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில், 11-ஆம் நூற்றாண்டு கோயில், ஓராயிரம் ஆண்டு வரலாற்றின் ஒரு உயர்ந்த சான்றாக நிற்கிறது, இப்பகுதியில் மிக உயரமான மற்றும் பழமையான கட்டிடமாக இன்றுவரை ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழ்நாட்டின் தஞ்சாவூர் நகரத்தில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான பிரகதீஸ்வரர் கோயில், அதன் பிரம்மாண்டத்திற்குப் பொருத்தமாக ‘முழு பிரபஞ்சத்தின் இறைவன்’ என்று பொருள்படும் வகையில் வாழும் பெரிய சோழர் கோயில் என்று போற்றப்படுகிறது. 1003-ஆம் ஆண்டு சோழப் பேரரசின் உச்சக்கட்டத்தின் போது கட்டப்பட்ட இந்த கட்டிடக்கலை அற்புதம், வியப்பூட்டும் வகையில் வெறும் ஏழு […]

சின்னசேலத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்:

     கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளருமான . தா. உதயசூரியன் தொடங்கி வைத்தார்.      இந்த சிறப்பு கூட்டத்தினை கள்ளக்குறிச்சி உதவி ஆணையர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மேலும் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் முன்னிலையும், இதனைத் தொடர்ந்து பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சம்பத்குமார் வரவேற்புரையும் வகித்தனர்.      இந்த முகாமில் வீட்டுமனைப் பட்டா, […]

தேவகோட்டையில் தே.மு.தி.க .தலைவர் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி;

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தே.மு.தி.க .தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு அனைத்துக் கட்சி பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள்  மற்றும் பொதுமக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்  திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்களால் கேப்டன் என அழைக்கப்படும் திரைப்பட கதாநாயகர் நடிகர் சங்க தலைவர் தேமுதிக கட்சியின் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்   என பல்வேறு பொறுப்புகளை திறம்பட கையாண்ட மனிதராக விளங்கியவர் விஜயகாந்த் அவர் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது  இவரின் மறைவை  துக்கநிகழ்வாக அனுசரிக்க […]

காவல்துறை சார்பில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று போதை பொருள் விழிப்புணர்வு பேரணி;

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றன காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் மதுவிலக்கு அமலாக்க துறை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இணைந்து போதை பொருட்களுக்கு எதிரான மதுவிலக்கு சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு உறுதி மொழியை  மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சண்முகவடிவு முன்னிலையில்  தனியார் மருத்துவ கல்லூரி மாணவிகள் மற்றும் […]

ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப பக்த சபையினர்கள் சார்பில் நடைபெற்ற 33ஆம் ஆண்டு சபரி யாத்திரை பயணம்;

வேலூர் மாவட்டம் , காட்பாடி வட்டம் ஜாப்ராப்பேட்டையில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப பக்த சபையினர்கள் சார்பில் நடைபெற்ற 33ஆம் ஆண்டு சபரி யாத்திரை பயணத்தை முன்னிட்டு மகா கணபதி ஹோமமும் ,ஸ்ரீ  தர்மசாஸ்தாவிற்கு அபிஷேகமும் , தீபாராதனையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் 108 சுமங்கலி  திருவிளக்கு பூஜையும் நடைபெற்றதை தொடர்ந்துஸ்ரீ தர்மசாஸ்தா திருவீதி உலாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில்  J.P.குப்புசாமி குரு சுவாமி,J.V.கஜேந்திரன்  துனைகுரு சுவாமி , மற்றும் ஜாப்ராப்பேட்டை, ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப பக்த சபையினர்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.

திருத்தணி முருகன் கோயிலில் இன்று திருப்படி திருவிழா.

திருத்தணி முருகன் கோயிலில் இன்று திருப்படி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அறுபடை வீடுகளில் சிறந்த விளங்கும் இவ்வாலயத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெறும் திருப்படி திருவிழா என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆண்டுக்கு 365 நாட்களை குறிக்கும் வகையில் இந்த மலைக் கோயிலுக்கு செல்வதற்கு 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முருக பக்தர்கள் பக்தி பாடல்களை பாடிய வண்ணம் படிக்கட்டுகளின் வழியாக நடந்து சென்று முருகனை தரிசிப்பது தான் திருப்படி திருவிழா என அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் திருத்தணி முருகனுக்கு 63 திருப்புகழ் பாடல்களை […]

மூளைச்சாவு ஏற்பட்டு மரணம் அடைந்தவர் . உடல் உறுப்புகள் தானம் செய்ததால். கலெக்டர் மலர்வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினர்.

திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் ஊராட்சி பத்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் .இவர் ஏற்கனவே காலமாகிவிட்ட நிலையில். அவரது மனைவி நாகரத்தினம்(60) தன் மகன்  குடும்பத்தாருடன் திருத்தணி. நேதாஜி .  நகர் பகுதியில் வசித்து வந்தார் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று.மேல் சிகிச்சைக்காக.  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு மூளை சாவு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. அவர் தன் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக பதிவு செய்த நிலையில் அவர் மரணம் அடைந்தார். […]

ஜனவரி 3ஆம் தேதி மக்களோடு முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது;

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 12 வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் மக்களோடு முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் ஜனவரி 3ஆம் தேதி  லலிதா சக்கரவர்த்தி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களிடம்  முகாம் தொடர்பான விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு,  நகராட்சி ஆணையர் இளவரசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசங்கர், நகராட்சி பொறியாளர்  சாம்பசிவம்,  நகர மன்ற உறுப்பினர்கள் […]

திருவண்ணாமலையில் மக்கள் சமூக நீதிப் பேரவை 7 வது மாநில செயற்குழு கூட்டம் ;

திருவண்ணாமலையில் வீரபத்திர சுவாமி திருமண மண்டபத்தில்  ஏழாவது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு  திருவண்ணாமலை மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் அவர்களின் தலைமைவாங்கினார்மாநில பொருளாளர் சுமதி   மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்  .லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரவையின் மூத்த தலைவர்கள்.மணிமேகலை ,  .வழக்கறிஞர் மனோகரன் , சேகர் , கணேசன், பிச்சைவேல் ஃதுரைசாமி,முருகேசன்,சண்முகம்,கூட்டத்தில் கீழ்கண்ட   தீர்மானங்கள்  ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.  தீர்மானங்கள்: 1.  மதவாதியால் இந்திய மக்களை பிரித்து ,  சமூக நீதிக்கு விரோதமாகவும்  செயல்பட்டு வருகின்ற  பா.ஜ.க அரசை  தோற்கடிப்பதற்கு  நாம் இந்திய கூட்டணியை ஆதரிப்போம். […]

கடையநல்லூர் கோட்ட மின் வாரியத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்;

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் நாள் கூட்டம் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் வைத்து அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர்.சந்திரசேகரன்,  கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்கள் மற்றும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கடையநல்லூர் கோட்டம் செயற்பொறியாளர் (பொறுப்பு ). மாரியப்பன், மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் கோட்டத்தின் […]