விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்;

கோவை மாவட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமையில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் கே.சுந்தரம் கோவை மாவட்ட தலைவர் என்.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மண்டல பாசன தேவைக்கு பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் படி ஏரி குளம் குட்டைகளை பாதுகாக்க வேண்டும் விண்ணப்பித்த ஒரு வருடத்திற்குள் பாகுபாடுகள் […]

எஸ்டிபிஐ இரத்ததான முகாம் – தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் துவக்கி வைத்தார்;

தென்காசி நகர எஸ்டிபிஐ மருத்துவ சேவை அணி மற்றும் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் ஆலியா ஹோமியோ கிளினிக்  மற்றும் புரோவிஷன் கண் மருத்துவமனை நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம் பாபக்கி தங்கள் மதரசாவில் வைத்து நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவ சேவை அணி நகர பொறுப்பாளர் ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார். நகர செயலாளர் முஹம்மது ரபீக்,நகர துணைத்தலைவர் பீர் முஹம்மது, நகர துணைச்செயலாளர் ஜாஹிர் ஹுசைன்,நகர பொருளாளர் பாதுஷா, நகர செயற்குழு உறுப்பினர்கள் […]

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்;

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக பெரியபாளையம் காவல் நிலைய மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.எனவே,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அமுல்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று முன் தினம் மாலை பூச்சிஅத்தி பேடு பஜார் வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.விசாரணையில் மோட்டார் […]

பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் திமுக அவசர செயற்குழு கூட்டம்.

. திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் ஆண்டார்குப்பத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழா கொண்டாடுவது,நாடாளுமன்ற தேர்தல் குறித்து, சென்னை மெரினாவில் அண்ணா மற்றும் கலைஞர் நினைவு சின்னங்கள் அமைப்பது குறித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அவை தலைவர் பகலவன் தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் பணி குழு பொறுப்பாளர் பி.டி.அரசகுமார் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.ஒன்றிய செயலாளர் சோழவரம் செல்வ […]

ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய புளியரை தம்பதிக்கு ரூ 5 லட்சம் வெகுமதி – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு;

தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவு நேரத்தில் ரயில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அந்த வழியாக வந்த ரயிலை அருகில் வசித்து வரும் சண்முகையா – வடக்குத்தியாள் என்ற வயதான தம்பதியினர் அந்த இரவு நேரத்தில் டார்ச் லைட்டுடன் ஓடி சென்று ரயிலை நிறுத்தி மிகப்பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றினர் இதனை அறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டி […]

சோனா தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டிகள் ;

சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டிகள் (க்ரிவாஸ்’24) வருகின்ற மார்ச் மாதம் 15ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கல்லூரி மாணவர்களுக்கான  புகைப்படம் எடுத்தல், பாடல், ஃபேஷன் ஷோ, நடனம், குறும்படம் போன்று பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்புகள் விடப்பட்டுள்ளது. மேலும் தேசிய அளவில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து  1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.   கல்லூரி […]

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ரூ10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்;

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ரூ10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில செயலாளர் டாக்டர் பரமசிவம் வழங்கினார். தமிழக முன்னாள் முதல்வரும் , அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் மணிவண்ணன் தலைமையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அருகே […]

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் முத்தூட்மைக்ரோபின்;

 நுண்கடன், நிதிச் சேர்க்கையை ஊக்குவிக்கிறது மற்றும் பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் உட்பட பின்தங்கிய குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இது பெண்களை தொழில்முனைவோரை ஆராய்வதற்கும், அணுகக்கூடிய நிதிச் சேவைகள் மூலம் நிலையான வருமானத்தைப் பெறுவதற்கும் ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் உள்ள புகழ்பெற்ற நுண்கடன் நிறுவனமான முத்தூட்மைக்ரோபின், பின்தங்கிய மக்கள் சுயாதீனமாக செயல்பட உதவுவதன் மூலம் மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் வாழ்க்கையை நுண்கடன் எவ்வாறு மேம்படுத்தமுடியும் என்பதற்கு முத்தூட் மைக்ரோபின் உதவியுடன் தன் வாழ்க்கையை மாற்றியமைத்த அனுஷ்யா உதாரணமாக உள்ளார். […]

துணை தபால் நிலையம் மூடப்பட்டதை கண்டித்து சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் முன்பு வாடிக்கையாளர்கள் போராட்டம்.

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் விஜயராகவன் நகர் பகுதியில் காசகாரனுர் துணை தபால் நிலையம் இயங்கி வந்தது  கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்த தபால் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினசரி கணக்கு  நிரந்தர கணக்கு தங்க பத்திரத்தில் முதலீடு மற்றும் பல்வேறு திட்டங்களில் சேர்ந்து வரவு செலவு கணக்கு நடத்தி வந்தனர்  இந்த நிலையில் விஜயராகவன் நகர் பகுதியில் இயங்கி வந்த தபால் நிலையம் இழப்பை சந்தித்து வருவதாக கூறி தபால் நிலையத்தை முன் அறிவிப்பு இல்லாமல் மூடியது  இதனால் வாடிக்கையாளர்கள் […]

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மாசி மாத பெளர்ணமி  மற்றும் சத்யநாரயண பூஜை.

செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மாசி மாதம் பெளர்ணமி பூஜையை முன்னிட்டு  யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகிரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 118- வது பெளர்ணமி தரிசனம் நடைபெற்றது.12 மணிக்கு சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் தங்கள் திருகரங்களால் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனைவுடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருள்ஆசி பெற்றனர்.அதனை தொடர்ந்து மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாரயண பூஜையும் செய்து […]