பாண்டிச்சேரி பிம்ஸ் (PIMS) மருத்துவமனை மற்றும் புதிய தளிர் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் எம். குன்னத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பாலி .அய்யாதுரை திருசங்கு தலைமையிலும் முன்னிலை குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் . K.சிவா முன்னிலையிலும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்க வைக்கப்பட்டது பிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் புதிய தளிர் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் இரா.விஜய் கோ.வினோத் கண்ணன் அ.கார்த்திகேயன் சமூக சேவகர் […]
பாண்டிச்சேரி பிம்ஸ் (PIMS) மருத்துவமனை மற்றும் புதிய தளிர் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்;
பாரத சாரண இயக்கம்-சிந்தனைநாள் பேரணி;
பேடன் பவுல் பிறந்தநாளை சிந்தனை நாளாக கொண்டப்படுகின்றது இதன் அடிப்படையில் வேலூர் முஸ்லீம் மே.நி.பள்ளியில் காலை 9 – 00 மணிக்கு சாரண இயக்க கொடி ஏற்றப்பட்டு மாவட்ட ஆணையர் சிவவடிவு கொடி அசைத்து பேரணியை தொடங்கிவைத்தார். இப்பேரணி முஸ்லிம் பள்ளியிலிருந்து வேலூர் முக்கிய வீதிகளில் சென்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைத்தானதில் முடிவுற்றது. இப்பேரணியில் மாவட்ட அமைப்பு ஆணையர் ஜெ.ஜான் பாபு ALT (S), மாவட்ட பயிற்சி ஆணையர் .M. டேவிட் ALT (S), மாவட்ட இணைச்செயலர் அருள்ஜோதி, மாவட்ட பயிற்சி ஆணையர் […]
மீஞ்சூர் அடுத்த நெய்தவாயலில் இலவச மருத்துவ முகாம்;
திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அடுத்த நெய்த வாயல் கிராமத்தில் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் மீஞ்சூர் எம்.எம்.ஆர் கிளினிக்கல் கேர் மற்றும் அபிநயா பிசியோதெரபி கிளினிக் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை குழந்தையின்மை ஆலோசனை மற்றும் பிசியோதெரபி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண்ணில் குறைபாடு உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இலவச விழிலென்ஸ் பொருத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது போக்குவரத்து தங்கும் இடம் உணவு மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் முகாம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வரும் வரை […]
அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் ;
அரூரில் அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு கச்சேரிமேட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உறுவ படத்திற்கு நகர செயலாளர் தீப்பொறிசெல்வம் தலைமையில் அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பொய்கைதரணிராஜ் அ.அறிவழகன் வழக்கறிஞர் பி.ராஜா மகளிரணி செயலாளர் வசந்தி இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுமதி நிர்வாகிகள் டிகே.குமார் ஏசு கனகராஜ் அஸ்வந்த் நாராயணன் ஆதிமூலம் நீலமேகம் ராஜதுரை மோகன் லட்சுமி ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் திரு.தொல் திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் தேர்தல் நடைமுறையில் இருந்து வரும் EVM மெஷினை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதனடிப்படையில் கள்ளக்குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் இரா. மதியழகன், சேந்தநாடு அறிவுக்கரசு ஆகியோர் தலைமையில், மாவட்ட பொருளாளர் கலையழகன், மாவட்டத் துணைச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன், கனக அம்பேத், சங்கராபுரம் […]
தமிழக சட்டப்பேரவையில் மாவீரன் கொங்கு குணாளன் நாடாருக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பாக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ- கோரிக்கை;
தமிழக சட்டப்பேரவையில் மாவீரன் கொங்கு குணாளன் நாடாருக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பாக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். கொங்கு தேச மக்களின் விடுதலைக்காக மாவீரன் தீரன் சின்னமலையின் போர்படை தளபதியாக இருந்து ஆங்கிலேயரை விரட்டி அடித்து சங்ககிரி கோட்டையிலே தூக்கு கயிறு முத்தமிட்ட கொங்கு நாட்டு மாவீரன் குணாளன் நாடார் அரசு விழா மற்றும் மணிமண்டபம் சிலை அமைத்தல் தொடர்பாக நமது நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை […]
உதவி ஆணையாளர் லெனின் தலைமையில் சட்டத்திற்கு புறம்பான மின்மோட்டார்கள் பறிமுதல்!
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதாக புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், உத்தரவின்பேரில் திருநெல்வேலி உதவி ஆணையாளர் லெனின் தலைமையில், கண்டியபேரி வெள்ளக்கோவில் தெருவில், சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் உறிஞ்சிய மின் மோட்டார்கள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் பகுதிக்கு உட்பட்ட பங்களாப்பா நகரில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதால் பலருக்கு முறையாக தண்ணீர் வருவதில்லை […]
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசி மக திருத்தேர் திருவிழா கொடியேற்றம்;
தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில். இப்பூவுலகில் அவதாரம் எடுத்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில் முதல்கால பூஜையை ராமேஸ்வரத்திலும், இரண்டாம்கால பூஜைக்காக தீர்த்தகிரிமலை (தீர்த்தமலை) மீது அம்பு எய்தி, தீர்த்தம் உண்டாக்கி அந்த தீர்த்தத்தைக் கொண்டு பூஜைகளை முடித்தார். அந்ததீர்த்தமே தீர்த்தமலையிலுள்ள ராமர் தீர்த்தமாகும். ஸ்ரீ ராமர், பார்வதிதேவி, குமரக்கடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவர் ஆகியோர் தவம்செய்து பாவவிமோசனம் பெற்ற தலம் இந்த திருத்தலமாகும். தருமபுரி மாவட்டத்தில் அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளி செய்யப்பட்ட ஒரே […]
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நல சங்கம்-ஆர்ப்பாட்டம்;
வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நல சங்கங்களின் கூட்டமைப்பினை சேலம் கோட்டை மைதானத்தில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர் . 50 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது ஒரு வருடம் ஆகியும் பதில் மாவட்ட நிர்வாகத்திடம் நடவடிக்கை இல்லை வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை தேவை அரசுத்துறை, தனியார் துறை நிறுவனங்கள் ,பூங்காக்கள் ,வணிக வளாகம் ,திருமண மண்டபம் ,திரையரங்குகள், மருத்துவமனை ,ஏடிஎம் […]
நம்பர் ஒன் நிலையை தக்க வைத்த இப்கோ;
‘இப்கோ’ எனப்படும் இந்திய உழவர் உரக் கூட்டுறவு லிமிடெட் கடந்த ஆண்டிலிருந்து அதன் நிலையைத் தக்கவைத்து, உலகின் சிறந்த 300 கூட்டுறவு நிறுவனங்களில் நம்பர் 1-வது இடத்தைப் பிடித்துள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விற்றுமுதல் விகிதத்தின் அடிப்படையில் தரவரிசை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இப்கோ குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது என்பதை இது குறிக்கிறது. ஒட்டுமொத்த விற்றுமுதல் தரவரிசையில் கடந்த நிதியாண்டில் 97-வது இடத்தில் இருந்த இப்கோ, 72-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்கோ அதன் 35,500 உறுப்பினர்களைக் […]