தென் மாவட்ட ஐவர் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மதுரை RLFA அணியினர்:

மதுரை மாவட்டத்தில் உள்ள திருநகர் “ACME SPORTS ARENA” விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தென்மாவட்ட  அளவிலான 15 வயதிற்குட்பட்டோர்களுக்காக “CHAMPIONS LEAGUE – 2023” ஐவர் கால்பந்து போட்டியில் தென்மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன .

முதல் போட்டியில் நண்பர்கள் கால்பந்து கழகம் திருமங்கலம் அணியினருடன் மோதியதில் 7-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் உசிலை கால்பந்து கழக அணியினருடன் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.கால் இறுதி போட்டியில் HFA திண்டுக்கல் கால்பந்து அணியினருடன் மோதியதில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அரையிறுதி போட்டியில் ACME Arena அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.இறுதிப்போட்டியில் RLFA அணி, ACME FA – A அணியினரை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டதை வென்றதுஇதில் மாநில கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற அணியினருடன் தலைமை பயிற்சியாளர் சுந்தரராஜா கலந்து கொண்டார்.