பூந்தமல்லி
சென்னை, போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கலில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் அய்யப்பன் தாங்கல் ஊராட்சி திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாயொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வந்தே மாதரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அய்யப்பன் தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஜமிலாபாண்டுரங்கன் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் தமிழக சிறு,குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், கழக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதிமோகன் ஆகியோர் கலைஞர் செய்த சாதனைகளை எடுத்து பேசினர்.
இதில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் உமாமகேஸ்வரி வந்தேமாதரம், முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாண்டுரங்கன், ஒன்றிய துணை செயலாளர் ஜீவா, ஒன்றிய பொருளாளர் ராஜாதேசிங்கு, ஒன்றிய கவுன்சிலர் பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஜனார்த்தன், வார்டு உறுப்பினர் அனிதா ராஜபாதர், மற்றும் தில்லை.சாரதி, லாரன்ஸ், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அமைச்சர் தாமோ அன்பரசன் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் தா மோ அன்பரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் திமுக நிர்வாகிகள் ஆகியோருக்கு அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஜமீலா பாண்டுரங்கன் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
மேலும் அமைச்சர் தா மோ அன்பரசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு தில்லை.சாரதி, லாரன்ஸ் ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை செய்து நினைவு பரிசு வழங்கினார்.
பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது.