சென்னை, மதுரவாயல் அடுத்த வானகரம், மேட்டுகுப்பம், சர்வீஸ் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் வைகாசி மாத ஆடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
காலை ஸ்ரீ கெங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து, தீப ஆராதனை நடைபெற்றது.
கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் பதிவிளக்கு போடபட்டு, பம்பை உடுக்கை வர்ணிப்பு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கெங்கை அம்மன் கரகம் ஜோடிக்கபட்டு, காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கங்கை அம்மன் கரகம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, மேட்டுகுப்பம் சேனியம்மன் கோவிலுக்கு சென்று, பம்பை உடுக்கை வர்ணிப்பு நடைபெற்று, ஆட்டு கிடா பலியிட்டு, அங்கிருந்து கரகம் ஊரை வலம் வந்து மீண்டும் கெங்கை அம்மன் ஆலயம் வந்தடைந்தது. கரகம் ஆலயம் வந்தவுடன், ஆட்டுகிடா பலியிட்டு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கூழ்வார்த்தல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருட்பிரசாதமான கூழ்ழை உண்டு மகிழ்ந்தனர்.
இரவு கெங்கை அம்மனுக்கு கும்பம் படைக்கபட்டு, கும்ப உணவானது பக்தர்களுக்கு வழங்கபட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு இரவு தெரு கூத்து, நடைபெற்றது.