இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹா சந்தனக்கூடு திருவிழா  விமர்சையாக நடந்தது. 

நடப்பாண்டு 849 ஆம் ஆண்டின் சந்தனக்கூடு மத நல்லிணக்க விழா   நிகழ்ச்சியாக பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக் கொடி யானை மேல் வைத்து ஊர்வலம் ஆக எடுத்துவந்து, மேளதாளம் முழங்க யானைகள் அணிவிக்க, குதிரைகள் நாட்டிய மாட, சந்தனக்கூடு பவனி வர, அனைத்து சமுதாயத்தினரும் அணிவகுக்க, வான வேடிக்கையோடு புனித மக்பராவில் சந்தனம் பூசப்பட்டது. ஜுன் 19-ம் தேதி அஸர் தொழுகைக்குப் பின் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். தர்ஹா கமிட்டினர் விழா ஏற்பாடு செய்தனர்.

.