முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் (100 நாள் வேலை) முதுகுளத்தூர் பேரூராட்சி உட்பட்ட பகுதியில் வாழக்கூடிய பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். சங்கர் கூறியதாவது. முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ள நிலையில் எந்த ஒரு தொழிற்சாலைகளும் இல்லாத நிலையிலும், வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியாக இருப்பதாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாக இருப்பதாலும் முதுகுளத்தூர் பேரூராட்சி அமைந்திருப்பதால் அடிப்படை வசதிக்கே கஷ்டப்படும் சூழலில் பொதுமக்கள் வாழ்ந்து வருகிறார்கள் முதுகுளத்தூர் பகுதியில் குடியிருக்க கூடிய மக்களில் பெரும்பாலானோர் முதுகுளத்தூர் பேரூராட்சி சுற்றியுள்ள 106 கிராமத்தில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரசாங்கம் பின்தங்கிய பகுதியான முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் பாலக்குடி பொதுமக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என கூறினார். இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு மாநிலச் செயலாளர் சங்கர் தலைமையில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அய்யாதுரை அவரிடம் வேலை வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்குச் சென்றும் மனு அளிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ. இ. வி. தொ.ச தாலுகா குழு தலைவர் என்.சண்முகையா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் கே.கணேசன், மாவட்டத் தலைவர் என்.கலையரசன், தாலுகா செயலாளர் பி. அங்குதான், தாலுகா பொருளாளர் வி.முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு செயலாளர் வி.முருகன் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்