காஞ்சிபுரம் அடுத்த பச்சையப்பன் ஆடவர் கல்லூரி எதிரில் உள்ள ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தலைமை அலுவலகத்தில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சுகாதார திட்டம் இணைந்து உலக ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா முதன்மை செயலாக்க அலுவலர் ராதா கிருஷ்ணா தலைமை தாங்கினார். அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் தாமரை மங்கை முன்னிலை வகித்தார்.
சுகாதார திட்டத் துணைத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணகுமார், நிர்வாக துறை முதன்மை பொது மேலாளர், லட்சுமணன் வரசக்தி ஹவுசிங் பைனான்ஸ் பொது மேலாளர் ஆனந்த் ஆகியோர் ரத்ததான முகாம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
ரத்தத்தின் தேவை குறித்தும் ரத்ததானம் கொடுப்பது முக்கியத்துவம் குறித்தும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
40க்கும் மேற்பட்டோர் ரத்த தானத்தை வழங்கினர்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உதவி பொது மேலாளர் செல்வக்குமார், முதன்மை மேலாளர்கள் லாசர், ஜெபஸ்டின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர் ஷாலினி ஆகியோர் செய்திருந்தனர்.