கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம் பழிவாங்க காத்திருக்கும் படுகுழிகள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் ரெட்டியார்பட்டி ஊராட்சி யில் இயங்கி வரும் தனியார் கட்டுமான நிறுவனம் பெரிய கோட்டை பூஞ்சோலை செல்லும் சாலை தெற்கு சின்ன
கரட்டுப்பட்டியிலிருந்து பெரிய கட்டுப்பட்டி செல்லும் சாலை என அதிக அளவில் தனியார் கட்டுமான நிறுவனம் கட்டுமான பொருட்கள் அடிக்கடி பயன்படுத்தி வந்ததினால் சாலையில் உள்ள பாலத்தின் நடுவில் பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் அடிக்கடி இவ்வழியில் செல்லும் போது சாலை விபத்துக்கு சிக்கிக்கொண்டு உள்ளனர் சமிபத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் சென்ற நபர்கள் அந்தக் குழியில் விழுந்து படுகாயம் அடைந்ததாக தெரிய வருகிறது .இந்த சாலையில் அதிக எடையுள்ள.. கடினமான எம் சாண்ட் ஜல்லிகற்கள் மற்றும் கருங்கல் ஏற்றுக்கொண்டு தனியார் கட்டுமான நிறுவனம் டிப்பர் வாகனத்தின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளன இதனால் அந்தப் பகுதியில் வாழும் பொது மக்களுக்கு இச்சாலை மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது.மற்றும் இந்த பள்ளத்தினால் உயிர் இழப்பு ஏற்படும்நிலை உள்ளது. எனவே பெரியகோட்டைஸசெல்லும் வழியில் பெரிய அளவில் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு பொதுமக்கள் நலன் கருதி உடனே அந்தப் பள்ளத்தை ஆய்வு செய்து சரி செய்து கொடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.