ராமநாதபுரம். ஜூன் 15. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் பாபுராஜ் (33) இவரது மனைவியுடன் அதே ஊரைச் சேர்ந்த வேல்முருகன் மகன் இருளகுமார்(20) இரவு நேரங்களில் பாபுராஜ் மனைவியுடன் போனில் பேசியதாகவும் அதனை பாபுராஜ் தட்டி கேட்டுள்ளார் . இந்த தகராறில் இருளகுமார் கட்டையால் தாக்கியதில்.பாபுராஜ் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இதனை அடுத்து முதுகுளத்தூர் போலீசில் பாபுராஜ் தாயார் பூமயில் (55) புகார் செய்தார்.புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குபதிவு செய்து வாலிபர் இருளகுமாரை தேடி வருகின்றனர்.