.
ஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தில் அமைந்துள்ள பாஞ்சாலியம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் அக்னி வசந்த விழாவில் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தில் பழமையான பாஞ்சாலியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில், 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அக்னி வசந்த விழா நடத்த ஊர்பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையெடுத்து அக்னி வசந்த விழாவையொட்டி, கடந்த, மாதம் 24 ம் தேதி ஊர்பொதுமக்கள் காப்பு கட்டிக் கொண்டு, அலகு நிறுத்தப்பட்டு மகாபாரத சொற்பொழிவு விழா தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, கோயிலில் தினந்தோறும் சொற்பொழிவில் வியாசர் கூறலும், விநாயகர் இயற்றலும், கோபாலன் பிறப்பும், கோகுலச்சிறப்பும், பாரத வீரர் பாரினில் தோற்றம், வில்வித்தை அரங்கேற்றம், அம்பாள் பிறப்பும், அருளுடையோர் சிறப்பும் உள்ளிட்ட சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தது.
அதேபோல்,அபிமன்யூ சண்டை, கர்ணன் மோட்சம் 18 ம் நாள் போர், வில் வளைப்பு, சுபத்திரை கல்யாணம், ராஜ சூய்ய யாகம், பகடைத் துகில், குறவஞ்சி, கிருஷ்ணன் தூது விராட பருவம் மற்றும் அரச்சுனன் தபசுமரம் ஏறி சிவபூஜை நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் மற்றும் மாலை தீமிதி திருவிழா நடந்தது,
அப்போது கோயில் வளாகம் முன்பு களிமண்ணால் மிகப் பெரியளவில் துரியோதனன் உருவபொம்மை அமைத்து, பல்வேறு வண்ணங்கள் பூசப்பட்டது. மேலும் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, துரியோதனன், பீமன் வேடமணிந்த நாடக கலைஞர்கள் துரியோதனனை பீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டு விரதமிருந்து நேர்த்திகடன் செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து, மாலையில் தீமிதி திருவிழாவில், காப்பு கட்டிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரதமிருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தி வழிப்பட்டனர். முன்னதாக,
ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சாமிதரிசனம் செய்தார். பின்னர், துரியோதனன் படுகள நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.
இதில்,ஆரணி சுற்றுட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்படுகளை ஊர்பொதுமக்களும், கோயில் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.