பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்துவர மார்புச்சளி இளகி வெளியாகும். இதை பானமாக அருந்துவதால் இருதய நோய் குணமாகும்
பனங்கற்கண்டில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), இரும்பு (அயன்), சாம்பல், புரதச்சத்துக்கள், மல்டி-வைட்டமின்களான துத்தநாகம் (ஜின்க்) மற்றும் பொட்டாசியம் உள்ளது. ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரக கோளாறுகள் முற்றிலும் குணமாகும். சிறிதளவு பனங்கற்கண்டு நெய், நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டுவர மூளை வளர்ச்சி பெறுவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சத்துக்களை அதிகமாக உண்டு பண்ணுகிறது. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்துவர மார்புச்சளி இளகி வெளியாகும். பனங்கற்கண்டு சுவைத்து உமிழ்நீரை சிறுக சிறுக விழுங்கி வர வாய் துர்நாற்றம், தொண்டைப்புண், வலி இவை நீங்கும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.