சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். தோசை, சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும்

தேவையான பொருட்கள் கனவா மீன் – அரை கிலோ வெங்காயம் – 1 சிறியது சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி சீரக தூள் – அரை தேக்கரண்டி தனியா தூள் – 1 தேக்கரண்டி மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை – சிறிதளவு உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: * வெங்காயம், சின்ன வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கனவா மீனை கழுவி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.. * கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் சற்று வதங்கியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். * பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கி, பின்பு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
* பின்பு கால் கப் தண்ணீர் ஊற்றி மசாலாவில் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். * அடுத்து ஊறவைத்த கனவா மீனை சேர்த்து கலந்துவிடவும். * பின்பு கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும். * கடைசியாக கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கலந்து இறக்கவும். * கனவா மீன் மசாலா தயார்!