.
இந்திய துணைக்கண்டமே பாராட்டும் விதமாக தமிழ் நாட்டில் நடைபெறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான கழக ஆட்சியை களங்கப்படுத்தும் விதமாக ஒன்றிய பிஜேபி அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை மூலம் மிரட்டும் முயற்சிகளை மேற்கொள்வதற்கு திருவாரூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் க.தனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது மாவட்ட கழக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தீர்மானங்களை விளக்கி பேசினார் .
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ,
இந்திய துணைக்கண்டத்தின் தவிர்க்க முடியாத சக்தியாகவும் , தமிழ் மொழிக்காகவும் தமிழ் இனத்தின் மேன்மைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடு பட்ட மண்ணின் மைந்தர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் புகழுக்கு மேலும் ஒரு வைர கிரீடமாய் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள “கலைஞர் கோட்டம் ” திறப்பு விழாவானது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் தேசிய தலைவர்கள் பங்கேற்க ஜூன் 20 அன்று நடைபெறுவதையொட்டி அழைப்பிதழ் கிடைக்கப்பெற்ற அனைவரும் பங்கேற்று சிறப்பிப்பது எனவும் அன்றைய தினம் முழுவதும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் முழுமையாக பங்கேற்று தலைவர் கலைஞர் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்ப்பது .
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவதோடு அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக தனது நிர்வாக திறத்தால் திறம்பட ஆட்சி செய்து கொண்டிருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியை அரசியல் காழ்ப்புணர்ச்சிகளால் களங்கப்படுத்த ,தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவைகளை ஏவி விட்டு மிரட்டி சீர்குலைக்க நினைக்கும் ஒன்றிய பிஜேபி அரசுக்கு திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வது .
விவசாயத்தின் மீது என்றைக்கும் அக்கறை உள்ள அரசாக செயல்படும் மண்ணின் மைந்தர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான ஆட்சியின் தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் விவசாய ஆதரவு செயல்பாடுகளில் ஒன்றாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்து கழக ஆட்சியின் சரித்திர சாதனையை தொடர்ந்து நிலைநாட்டி இருக்கும் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது
சமீபத்தில் ஏற்பட்ட ஒடிசா ரயில் விபத்தில் மறைந்த அனைவருக்கும் மாவட்டக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி.பாலு, துணைத்தலைவர் சேகர் கலியபெருமாள், மாவட்ட துணை செயலாளர்கள் எம்.எஸ். கார்த்திக், எம்.ராமகிருஷ்ணன், சாந்தி பாஸ்கர்,மு.வெங்கடேசன், மற்றும் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.