சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போனின் சப்போர்ட் பேஜ் . தற்போது இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. புதிய கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி M33 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
சாம்சங் இந்தியா வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதன் மூலம் கேலக்ஸி M34 5ஜி மாடல் உருவாகி இருப்பது உறுதியாகிவிட்டது. இவை தவிர இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. சப்போர்ட் பேஜில் கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் மட்டும் இடம்பெற்று இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி M34 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
சாம்சங் கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் நாட்ச், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5 ஒஎஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5MP மேக்ரோ சென்சார் மற்றும் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் சார்ஜிங் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.