தென்காசி மாவட்டம் தென்காசி காவல் எல்லைக்குட்பட்ட கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பீர் மற்றும் பிராந்தி  பாட்டில்களை போட விவசாய மக்களுக்கு அச்சம் ஏற்படும் வகையில் நடந்ததை அந்த ஊர் இளைஞர்கள் மூலமாக தெரிந்து கொண்ட தென்காசி காவல்  ஆய்வாளர் கே.எஸ். பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விஜயகுமார் அவர்கள் தலைமையில் விவசாய நிலத்தில் உள்ள  பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை அப்புறப்படுத்தப்பட்டது இதில் சுமார் 300 பாட்டில்கள் எடுக்கப்பட்டது. இளைஞர்களுக்கு போதைக்கு பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்றும் விவசாய நிலங்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது அந்த ஊர் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இச்செயலைக் கண்டு காவல் துறையை பெரிதும்  பாராட்டினார்கள்.இச்சம்பவம் கீழப்புலியூர் கிராமத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என அந்த பகுதி பெரியோர்கள் கூறிவருகிறார்கள்.