தென்காசி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 40 கிராம பஞ்சாயத்துகளில், தோட்டக்கலைத்துறைக்கென 13 கிராம பஞ்சாயத்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டம் மூலமாக 29.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலமாக ஒரு கிராம ஊராட்சிக்கு 300 எண்கள் வீதம் ஐந்து வகை (மா, சப்போட்டா, நெல்லி, எலுமிச்சை, கொய்யா) பழமரக்கன்றுகள் அடங்கிய தொகுப்பு ஒரு தொகுப்பு ரூ.200/- வீதம் 75 சதவிகித மானியத்தில் 12000 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டிலும், காய்கறிகள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் 75 சதவிகித மானியத்தில் இடுபொருட்கள் நமது மாவட்டத்தில் மொத்தமாக 96 ஹெக்டேர் பரப்பளவிலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதனுடன் கூடுதலாக பரப்பு விரிவாக்கம் இனத்தில் மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி மற்றும் நாவல் போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.18000/- வீதம் 100% சதவிகித மானியத்தில் மொத்தம் 25 ஹெக்டேர் பரப்பளவிலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தும் கிராம பஞ்சாயத்துகளில் தோட்டக்கலைத்துறையின் பிற திட்டங்களான தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டங்கள மற்ற பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத்திட்டம் போன்ற பிற திட்டங்களின் மூலமாகவும் பல்வேறு பணிகள் 80% (80 சதவீதம்) தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.