ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக பல்வேறு பொருட்கள் கொண்டு செல்வதும் இலங்கையில் இருந்து பல்வேறு பொருட்களை கடத்தி வரும் நிகழ்வுகளும் தொடர் கதையாக உள்ளது இந்த சூழ்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்திச் செல்லும் நிகழ்வும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே ஒரு வீட்டில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கேள்விப்பட்டினம் கடற்கரை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் திடீரென பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சஞ்சய் காந்தி என்ற வாலிபர் மறைத்து வைத்திருந்த சுமார் 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர் இதனை தொடர்ந்து வனத்துறையினர் இராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டு படகு மூலம் இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலும் இலங்கையில் கடல் அட்டைகளை உணவுப் பொருளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிய வருகிறது இதனை தொடர்ந்து சஞ்சய் காந்தி மருத்துவ பரிசோதனை செய்த பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்
வனத்துறை வன பாதுகாப்பு சட்டத்தின் படி அட்டவணை எண் ஒன்றில் கடல் அட்டை வருவதால் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க உள்ளனர் மேலும் வனத்துறை சார்பில் கூறுகையில்