சென்னை, மேடவாக்கம், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் அருகே செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பசுமைத் தாயகம் சார்பில் காலநிலை நடவடிக்கை கோரி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட பசுமை தாயகம் துணை செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பசுமைத்தாயகம் மாநில இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், பசுமை தாயகம் மாநிலத் துணைச் செயலாளர் ஐநா கண்ணன், மாவட்ட பசுமைத்தாயாக செயலாளர் சக்கரபாணி, பாமக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார், பாமக மாவட்ட தலைவர் பச்சையப்பன் ஆகியோர் கலந்துகொண்டு காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கி, மாறிவரும் காலநிலையால் ஏற்படும் ஆபத்து குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து காலநிலை நடவடிக்கை கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
இதில் தாமஸ் மலை வடக்கு ஒன்றிய பாமக செயலாளர் சத்ரியன்குமார், ஒன்றிய தலைவர் ஆறுமுகம், பசுமை தாயகம் மற்றும் பாமக நிர்வாகிகள் தாண்டவன், சாரங்கபாணி, மணிவண்ணன், ருத்மநாதன், ராகவன், பிரகாசம், ராஜேந்திரன், குமார், அருண்குமார், கார்த்திக், ஜெயராமன், விஜயகுமார், முத்துக்குமார், பழனிவேல், சக்கரவர்த்தி, நல்லதம்பி, பிரேம்குமார், அவினாஷ், பிரசாந்த், பழனி மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.