கோவை மாவட்டம் பேரூர் வட்டாரத்திற்கு உட்பட்ட வடிவேலாம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக முறையான அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்த நாட்டு செங்கல் சூலைகளுக்கு மின்சார விநியோகம் நிறுத்தம் செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.அதனைத்தொடர்ந்து அரசு அனுமதியின்றி  இயங்கிவந்த 20 நாட்டு  செங்கல் சூளைகளை பேரூர் வட்டாட்சியர் இந்துமதி தலைமையில் மாசுகட்டுப்பாட்டு வாரியம், உதவி பொறியாளர்  ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு  சீல் வைத்தனர். உடன்  ஆலாந்துறை காவல் ஆய்வாளர் பாண்டியன், வருவாய் ஆய்வாளர் கார்டேலியா ,கிராம நிர்வாக அலுவலர்கள் பிரதாப், சரவணன் மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.