கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்தூர் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக இந்தியன் வங்கி புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டட திறப்பு விழா கடலூர் மண்டல மேலாளர் கௌரிசங்கர் ராவ் அவர்களின் ஒருங்கிணைப்பில், இந்த புதிய கட்டடத்தை கடலூர் துணை மண்டல மேலாளர் பாலமுருகன் திறந்து வைத்தார். மேலும் சுமார் 20 லட்சம் ரூபாயினை வாடிக்கையாளர்களுக்கு கடன் உதவி வழங்கி, வங்கியில் வாங்கும் கடன்களை எப்படி திரும்ப செலுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் கரடிசித்தூர் கிளை மேலாளர் பால மனோஜ், உதவி கிளை மேலாளர் கிருஷ்ணமோகன், காசாளர் அரியசெல்வம், பரனேஷ், மற்றும் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என ஏராளமானோர் கொண்டனர்.