மேற்கு வங்காளத்தில் ஜூலை 8-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. 2019 மக்களவை தேர்தலில் வடக்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் அடுத்த மாதம் 8-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரச்சாரத்தை வரும் திங்கட்கிழமை தொடங்குகிறார். வடக்கு வங்காளத்தில் உள்ள கூச் பெஹார் மாவட்டத்தில் பொது பேரணியுடன் தொடங்க உள்ளார். 2019 மக்களவை தேர்தலில் வடக்கு வங்காளத்தில் இருந்து ஒரு தொகுதி கூட திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பதை கருத்தில் கொண்டு, ஆளும் கட்சித் தலைமை அப்பகுதிக்கு தற்போது முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. அலிபுர்துவார் மாவட்டத்திலும் இதுபோன்ற பேரணியில் முதல் மந்திரி உரையாற்றுவார். அதன் விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என் அக்கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்தார். 2024 மக்களவை தேர்தலின் போக்கு எப்படி இருக்கும் என்பதற்கு பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் ஒரு அறிகுறியாக இருக்கும் என்பதால் இத்தேர்தல் அரசியல் அரங்கில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.