தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 375 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டசத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்களையும், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.39,000 மதிப்பில் இலவச தேய்ப்புபெட்டிகளையும் மாவட்டஆட்சித்தலைவர் வழங்கினார்.