கோவை மாவட்டம் நேரு விளையாட்டு அரங்கம் கூடைப்பந்து மைதானத்தில் மாநிலங்களுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 3X3 (வீல்சேர்) கூடைப்பந்து மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான 5X5 சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டிகள் பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சிற்றுளி தொண்டு நிறுவனத்தால் வருகிற 28ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை
இந்தியாவிலேயே முதல்முறையாக இதுபோன்ற போட்டி நடத்தப்படுகிறது. இதுகுறித்து பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பத்மநாபன், வக்கீல் சுந்தர் ராஜன், ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், குணசேகரன் ஆகியோர் கூறுகையில் இப்போட்டிகள் மார்டின் குழுமம் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு செயல்பாட்டால் ஆதவளிக்கப்படுகிறது. ராகா குழுமம், பொடாரன் குளிர்பான நிறுவனம், சரவணா ப்ளூ மெட்டல்,மை ஸ்போர்ட்ஸ் பேக்டரி,க்ராவிட்டி ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களும் இப்போட்டிகளுக்கான ஆதரவாளர்கள், உடலியல் சிகிச்சை மற்றும் முதலுதவிகளுக்காக ஸ்போர்ட்ஸ்மெட் நிறுவனம் மைதானத்தில் இருப்பார்கள்.இப்போட்டியின் தலைப்பான ‘அனைவருக்குமான கூடைப்பந்து’ போலவே 10 வயது முதல் 59 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் 13 பிரிவுகளில் போட்டியிட உள்ளார்கள். மொத்தம் 159 அணிகள் 3X3 கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளார்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா அணிகள் 5X5 சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டிகளில் விளையாட உள்ளார்கள். மாற்றுதிறனாளிகளுக்கு வாய்ப்புகள் இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
என்று தெரிவித்தனர்.