திருவாரூர் மாவட்டம் கோட்டூர் வடக்கு ஒன்றியத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு கொடிமேடையில் அமைக்கப்பட்டுள்ள 70அடி பிரமாண்ட கொடிக்கம்பத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ., தி.மு.கழக கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒன்றிய செயலாளர் பால.ஞானவேல் , மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்வுக்கு முன்னிலை வகித்தனர்.
மண்ணின் மைந்தர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்களோடு திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக்கழக, வார்டுகழகங்களில் தி.மு.க. சார்பில் பல்வேறு செவைத்திட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்று வருகின்றன். இதன் தொடர்ச்சியாக கோட்டூர் தி.மு.க. வடக்கு ஒன்றியத்தில் திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி பிரதான சாலையில் உள்ள மழவராயநல்லூர் ஊராட்சியில் உள்ள ரத்தினவேல் நகர் பகுதியில் தி.மு.கழக செயல்மறவர் யோகபாலன் அவர்களின் ஏற்பாட்டில் சட்டவிதிகளுக்குட்பட்டு கலைஞர் நூற்றாண்டுவிழா சிறப்பு கொடிமேடையும் , 70 அடி உயர தி.மு.கழக கொடிக்கம்பமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு கொடி மேடையை தி.மு.க.மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ.,தலைமை ஏற்று தி.மு.கழக கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் எம்.ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் பால.ஞானவேல் உள்ளிட்டோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா வெங்கடாசலம் நன்றி தெரிவித்தார். தி.மு.கழக நிர்வாகிகளும் , பொதுமக்களும் விழாவில் பங்கேற்றனர்.