செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் மண்டலம், வார்டு 58, பெருமாள் கோவில் சன்னதி சாலையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம் ரூ.24.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலத்தினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் .தா.மோ.அன்பரசன் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் .ஆ.ர.ராகுல் நாத், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் .வசந்தகுமாரி கமலகண்ணன், மாநகராட்சி ஆணையர் .ஆர்.அழகுமீனா, ., துணை மேயர் .கோ.காமராஜ், மண்டலக் குழுத் தலைவர் .தூாகாமராஜ், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் .இளங்கோ, கோட்டப் பொறியாளர் ,செல்வம் நம்பி, கண்காணிப்பு பொறியாளர் .கந்தசாமி, உதவி பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.