இந்தியாவின் நம்பர் 1 ஏற்றுமதி பிராண்டான, சோனாலிகா டிராக்டர்ஸ் (Sonalika Tractors)
நிறுவனம் தொடர்ந்து வலிமையான வழித் தோன்றலின் மூலம் புதிய கண்டுபிடிப்புகள்
வாயிலாக விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. 2024-ஆம் நிதி ஆண்டில்
மிக அதிக அளவாக – முதல் காலாண்டில், உள்நாட்டில் 40,700
டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த டிராக்டர்
சந்தையின் வளர்ச்சி விகிதத்தையும் விஞ்சியுள்ளது.
சோனாலிகாவின் ஹெவி டூட்டி டிராக்டர்கள் மற்றும் பிராந்திய தேவைக்கேற்ப டிராக்டர்களை
வடிவமைத்துத் தருவது வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இது 2023-ஆம் நிதி ஆண்டிலிருந்து
தொடர்வதோடு 2024-ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மிக அதிக அளவில் விற்பனை
செய்து எதிர்வரும் காலத்திலும் தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளது.
நாட்டின் பருவ மழைக் காலம் எதிர்பார்த்தபடி பரவலமாக தொடங்கியுள்ளது. இது
விவசாயத்திற்கு ஆரோக்கியமான சமிக்ஞையாகும். இதனால் இந்தியாவின் பல பகுதிகளிலும்
நிலத்தடி நீர்வளம் அதிகரித்துள்ளது. இவற்றுடன் அரசுகள் மானிய உதவிகள் மற்றும்
குறைந்தபட்ச ஆதார விலை (MSP) ஆகியன விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்களாகும்.
இவற்றுடன் சோனாலிகா நிறுவனம் ஹெவி டூட்டி (heavy-duty) டிராக்டர்களை வழங்கி
விவாசயத்தை தொழில்நுட்பம் சார்ந்ததாக – குறைந்த விலையில் மேற்கொள்ளத் தக்கதாக
மாற்றிவருகிறது. உலகின் நம்பர் 1 டிராக்டர் உற்பத்தி ஆலையை சோனாலிகா
கொண்டிருப்பதால் 20 ஹெச்.பி. திறன் முதல் 120 ஹெச்.பி. திறன் வரை உள்ள டிராக்டர்களைத்
தயாரித்து அளிக்கிறது. இந்நிறுவனத் தயாரிப்புகளை 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 14
லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
டிராக்டர் விற்பனை அதிகரித்தது குறித்து இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட்
நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் திரு. ரமன் மிட்டல் (Mr. Raman Mittal) கூறுகையில்,
“விவசாயிகளே முதன்மையானவர்கள் (Farmers First) என்ற எங்களின் வெற்றிகரமான
அணுகுமுறை 2024-ஆம் நிதி ஆண்டிலும் தொடர்கிறது. இதன் வாயிலாக நடப்பு நிதி ஆண்டின்
முதல் காலாண்டில் மிக அதிகபட்சமாக 40,700 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது உள்நாட்டில் டிராக்டர் விற்பனைத் துறை வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாகும். எங்களது
தயாரிப்புகளில் புத்தாக்கம் மற்றும் சர்வதேச தரத்தில் உருவான ஹெவி டூட்டி டிராக்டர்கள்
மூலம் விவசாயிகளுக்கு உதவி அவர்கள் அதிகபட்ச விளைச்சலை எட்ட துணை நிற்கிறோம்.
விவசாயிகளுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் இடையிலான பிணைப்பு வலுவாகத் திகழ்கிறது
என்பதற்கு எங்களது சமீபத்திய விற்பனை சாதனை ஒரு அளவீடாகும்.

நாட்டின் 80% பகுதிகளில் பருவமழை தொடங்கிவிட்டது. இது விவசாயத் துறைக்கு ஒரு நல்ல
சமிக்ஞையாகும். சராசரிக்கும் அதிகமான மழையளவு இருக்கும் என்பதற்கு இது
உதாரணமாகும். நீர் நிலைகளில் நீர் நிரம்புவதால் வேளாண் சார்ந்த பணிகள் முழுவீச்சில்
நடைபெறுகின்றன. மேலும் அனைத்து வகையான குறுவை சாகுபடி பொருள்களுக்கான
குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்திருப்பது, விவசாயிகளின் வருமானத்தை உறுதி
செய்வதோடு விவசாயிகளை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது. இதனால் விவசாயிகள்
பலதரப்பட்ட வேளாண் பொருள்களை சாகுபடி செய்யத் தூண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார்.