செங்கல்பட்டு மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு வி வி சாய் பிரணீத் அவர்களின் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் மதுராந்தக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் .சிவசக்தி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்த நிலையில் அய்யனார் கோயில் ஜங்ஷன் அருகே இரவு நேரங்களில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 1. சேதுபதி சிவகங்கை மாவட்டம்,2. அபிஷேக் மதுரை மாவட்டம்,3. லோகேஸ்வரன் மதுராந்தகம்,4. சின்ன @ சரண் மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் என்ற நான்கு நபர்களை மதுராந்தகம் காவல் ஆய்வாளர் .தர்மலிங்கம் மற்றும் . மோகன்ராஜ் SSI, . இளங்கோவன் SSI . குப்புசாமி SSI . முத்துக்குமார் HC 279, . கர்ணன் HC 246. உமா பிரபு HC 301,. ராஜேஷ் 337 . கவியரசன் தனிப்பிரிவு காவலர் . மணிகண்டன் காவலர் அவர்கள் தலைமையில் பிடித்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததில் மேற்படி நபர்கள் செங்கல்பட்டு மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் வழிப்பறி செய்தது தெரியவந்தது மேற்படி நபர்களிடமிருந்து நான்கு பட்டாகத்தி ஆறு மொபைல் போன் 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.