சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் பவானி நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு ஆனி மாத தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை அன்று காலை கணபதி ஹோமம் இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையில் பால்குடம் ஸ்ரீ பவானி நகர் ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலயத்தில் இருந்து ‌ ஸ்ரீ பவானி அம்மன் ஆலயம் ‌ வந்தடைந்து ஸ்ரீ பவானி அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்பாளுக்கு கொடியேற்றத்துடன் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வுகள் நடைபெற்றது.மாலை 7.00 மணிக்கு மேல் ‌ அம்பாள் திருத்தேரில் அலங்காரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. சனிக்கிழமை காலையில் 108 கிலோ குங்குமம் அபிஷேகம் மாலையில்  முளைப்பாரி ஊர்வலமும் மாலை 7.00 மணிக்கு மேல் அம்பாள் அக்கினி கப்பரை கரத்தி ஏந்தி வண்ணம் திருவீதி உலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது. காலையில் ஆலய பால் காவடி மதியம் மாபெரும் அன்னதான நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:00 மணிக்கு மேல் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி  ஆதிபராசக்தி ஸ்ரீ பவானி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர்  காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேற்றி கடனை பூர்த்தி செய்தனர். இந்த நிகழ்வை முன்னிட்டு ஆலய அன்னதான குழு சார்பாக தொடர்ந்து ஐந்து நாட்கள் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆலய நிர்வாகிகள் தலைவர் இ. மாரியப்பன், செயலாளர் கே.ரகு, பொருளாளர் எஸ். ரமேஷ், துணைத் தலைவர்கள் ஆர் மூர்த்தி,பி.சேகர்,கே. பிரகாஷ், துணைச் செயலாளர்கள் கே. தனுஷ்சேஷாத்ரி,பி.லுதர்சனன்

 ஆலய மண்டல திருப்பணிக்குழு நிர்வாகிகள் தலைவர் பி.என்.கே. கிருஷ்ணன், செயலாளர் கிச்சா(எ) ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் மற்றும் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் கே. ராஜவேலு, துணைத் தலைவர்கள் 

எம். சேதுராமன்,கே. சண்முகசுந்தரம்,எம். லட்சுமிபதி,டி. மணிகண்டன், சட்ட ஆலோசகர்கள் வி. சக்திவேல், சிவ சூர்யா, இணைச் செயலாளர்கள் ஜி. சரவணன், எம். முருகன்,சி.செந்தில், எஸ்.சதீஷ், துணைச் செயலாளர்கள் ஏ. கார்த்திக்,எம்.ஜி. கார்த்திக், ஆர். கண்ணன், ஆர்‌.எம். அரிமா தமிழ்செல்வன், கனக்குத் தணிக்கையாளர்கள் எம்.கன்னியப்பன், கே.கோபி, ஆலய அறங்காவலர்கள் பி சுப்பிரமணி, கே. சுப்பிரமணி, ஜி. பெரியசாமி, ஆர். சம்பந்தம்,டி. அசோகன்,எம். தியாகராஜன் கௌரவ ஆலோசகர்கள் டி. மாரிக்கனி, அன்னதான குழு பொறுப்பாளர்கள் பி. பாலாஜி,கே. விக்னேஷ், எம்வி.விசு,எம். வினோத்,எஸ்.ஆர். மணிகண்டன்,டி. முகேஷ்,எஸ்.சிவ மகேஷ்,ஆர்.அசோக், பி.வினோத் ,ஜி.பிரகாஷ் மற்றும் அன்னதான குழு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், ஆலய நிர்வாகிகள், ஆலய திருப்பணி குழு நிர்வாகிகள் உட்பட பலர் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.