செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் இவர் மீது தாம்பரம் ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது அவர் மீது உள்ள வழக்கு ஒன்றுக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த லோகேஷ்சை இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஓட ஓட அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர் தொடர்ந்து அவர்களிடம் சிக்காத லோகேஷ் நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓடி உள்ளார். லோகேஷை கொலை செய்ய வந்த கும்பல் லோகேஷ் மீது நாட்டு வெடி குண்டு வீசியதில் 100 மீட்டர் தொலைவில் லோகேஷ் கீழே விழுந்துள்ளார் ஐந்து பேர் கொண்ட கும்பல் லோகேஷை சரமாரியாக வெட்டிவிட்டு கூட்டம் சேர்ந்ததால் அப்பகுதியில் இருந்து அந்த மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டனர். தொடர்ந்து லோகேஷை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். தற்பொழுது நீதிமன்றம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக வெடிகுண்டு வீசி கொல்லப்படும் சம்பவம் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் வெடிகுண்டு கலாச்சாரம் துவங்கி இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் இது போன்ற சம்பவம் நடைபெற்று இருப்பது செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2015 ஆம் ஆண்டு இரும்புலியூரில் கொலை வழக்கில் 2 வது முக்கிய குற்றவாளி லோகேஷ். முதல் குற்றவாளியான பாஸ்கரை ஏற்கனவே கொலை செய்திருந்த நிலையில் இரண்டாது குற்றவாளியான லேகேஷ் கொலை செய்ய முயற்சி பழிக்கு பழி தீர்க்கவே இந்த கொலை முயற்சி நடைபெற்றதாக தகவல்.