தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் அரச மர விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலானது மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவிலாகும். இந்நிலையில சங்கடஹரா சதுர்த்தியினை முன்னிட்டு இந்த திருக்கோவிலில் அரசமர பிள்ளையாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.விபூதி ,பால், தயிர், இளநீர், பழங்கள், தேன் ,நெய் ,சந்தனம் ,மஞ்சள், பன்னீர் ,திருமஞ்சல் பொடி, அருகம்புல் பொடி மற்றும் 13 வகையான மங்களகரமான பொடிகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.இந்த சிறப்பு பூஜையில் பழனிசெட்டிபட்டி ,தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வருகை புரிந்து அரச மர பிள்ளையாரை பற்றி துதி பாடல்களை பாடி சிறப்பித்தனர் .மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமும் வழங்கப்பட்டது