தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அச்சன்புதூர் பேரூராட்சி மேக்கரை குளத்தின் கரையானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நிரம்பியதால் திடீரென குளத்தின் கரை உடைந்து தண்ணீர் முழுவதும் விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது… அடவிநயினார்கோவில் அணை செல்லும் பிரதான சாலையில் அரிப்பு ஏற்பட்டு கற்கள் பெயர்ந்து வயல்வெளிகளில் நிரம்பியது. மேலும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சாலை சேதமடைந்தது. 

இது குறித்து தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னா் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு வெள்ளத்தால் உடைந்துபோன குளத்தின் கரை மற்றும் பெயர்ந்து போன சாலைகளை போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு செய்திட அறிவுறுத்தினார்.

அச்சன்புதுார் பேரூராட்சி மன்ற தலைவா் டாக்டர் சுசீகரன், அண்ணா தொழிற்சங்க முன்னாள் மண்டலத்தலைவா் கந்தசாமிபாண்டியன், பேரூர் கழக செயலாளா்கள் முத்துக்குட்டி, கார்த்திக்ரவி, முன்னாள் பேரூர் கழக செயலாளா் முத்தழகு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை செயலாளர் ஞானராஜ், மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், மேக்கரை கிளை செயலாளா் செய்யது உசேன், வார்டு செயலாளா்கள் சின்னக்கனி, ராசையா, விவசாயிகள் ஆறுமுகப்பாண்டி, முகம்மதுபாரூக் உள்பட பலா் உடனிருந்தனர்.