தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் முத்துக்கோன் – பாக்கியத்தாய் அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் அழகு. தன் இளம் வயது முதல் சுதந்திரப் பற்று மிக்கவராக இருந்தார். இதனால் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து, போராடி வந்தார்.

ஜெகவீரராம எட்டப்ப நாயக்கரின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தார் அழகு முத்துகோன். அனைத்து பாளையக்காரர்களிடமும் நேரடியாக வரிவசூலித்த ஆங்கிலேயர்கள், 1755 ஆம் ஆண்டு எட்டயபுரத்திற்கும் வரிகேட்டு ஓலை அனுப்பினர். இதனை எதிர்த்து, ஆங்கிலேயர்களுக்கு நாம் ஏன் வரி கட்ட வேண்டும் என்று எட்டயபுர மன்னரிடம் கடுமையாக வாதிட்டார் மாவீரன்அழகுமுத்துக்கோன். இதன் விளைவாக, எட்டயபுர மன்னரும் அழகுமுத்துக்கோனின் உணர்வினை ஏற்றுக்கொண்டார்.சுதந்திர மனிதனாய் உயிரைவிடுவோம்” என்று கம்பீரமாக வீரன்அழகுமுத்துக்கோன் முழக்கமிட்டார்.வீரன் அழகுமுத்துக்கோன் படையில் உள்ள 255 வீரர்களை நடுக்காட்டூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுஆங்கிலேயர்களால் கொடூரமாக தாக்கி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அழகுமுத்துக்கோன் உடனிருந்த ஏழு வீரர்களையும் பீரங்கி வாயில் கட்டி வைத்துச் சுட்டுக் கொன்றனர். இந்த கொடூரச் சம்பவத்தின் மூலம் விடுதலைக்கான தாக்கம் தமிழகத்தில் ஏற்பட்டது. விடுதலைக்கு வித்திட்ட சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 266வது  குருபூஜையை தமிழகம் முழுவதும் உள்ள யாதவ சமுதாயத்தினர் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர் அதை மேலும் சிறப்பாக  கொண்டாடும் விதமாக சிங்கபெருமான் கோவில் பகுதியில் அழகு முத்துக்க்கோன் 266வது குரு பூஜையை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதில் திரு ஏமந்குமார் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து ஆய்வாளர் கலந்து கொண்டு சாலை மார்க்கத்தில் தலை கவசம் இல்லாமல் செல்லக்கூடிய இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலை கவசம் வழங்கி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார அதன் பின் அன்னதானத்தை மரியாதைச்குரிய ஸ்ரீ கே ஆர்சி பேருந்து உரிமையாளர்  கே ஆர்சி ஜெ. சதிஸ் அவர்கள் துவக்கி வைத்து மற்றும் செங்கை மாவட்ட யாதவ் சங்க தலைவர் ஜனர்த்தனம் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்  மற்றும்இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் சிங்கை கணேஷ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை. மேலும் சிறப்பித்தார்  ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை ,பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது.மற்றும் ஏராளமான காவல் துறை நண்பர்கள் மற்றும் அன்னை தெரேசா அறக்கட்டளை தெரேசா குமார் மற்றும் வெளிச்சம் பல்நோக்கு மருத்துவமணையின் நிர்வாக இயக்குனர்.தமிழ்அரசன் பங்கேற்றார் மற்றும் வீராபுரம் எத்திராஜ மகேந்திரா சிட்டி ரவி , குமரபாபு,  நாரயணன், துறை ராஜ். ராதாகிருஷ்ணன் பிஜேபி அமைப்பை சேர்த்த ரகுராம் , அமுல் பேட்டரி சீனு என்கிற சிவனேசன் மற்றும் யாதவ சமுதாய மக்கள் பங்கேற்றனர் மேலும் இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணற்ற அமைப்புகள் நண்பர்கள் தோழர்கள் கலந்து கொண்டனர் இறுதியாக  தேவலூர் வீரபத்திரன் நன்றியுரை வழங்கினார்