முதுகுளத்தூர் வட்டாரம் வளநாடு கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 14.47 ஏக்கர் தரிசு நிலத்தில் கடந்த ஆண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கருவல் முழுமையாக அகற்றப்பட்டு நிலம் சீர் செய்யப்பட்டு குதிரைவாலி பயிர் பயிரிடப்பட்டது. தற்போது வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றினை வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி அவர்கள் ஆய்வு செய்தார். பின்னர் தொகுப்பு தரிசு நில விவசாயிகளிடம் பேசிய அவர் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு பெற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி தொகுப்பு நில மண்வாகிற்கு ஏற்ற இலாபம் தரக்கூடிய பழக்கன்றுகளை பயிரிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆழ்குழாய் கிணற்று நீரை சிக்கனமாகப் பயன்படுத்த சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், வள நாடு ஊராட்சிக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள தென்னங் கன்றுகளை விவசாயிகள் நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் உடனிருந்தார். ஆய்விற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் . தனதுரை செய்திருந்தார்.