முதுகுளத்தூர் பேரூராட்சி 9வது வார்டில் நடைபெற்ற கபடி விளையாட்டை தொடங்கிவைத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தில் இமானுவேல் சிலைவிரைவில் தனியார் இடத்தில் அமைக்கப்படும் எனவும், கன்னிராஜபுரத்தில் காமராஜர் சிலையும், கமுதி அருகே ராமசாமி பட்டியில் வீரபாண்டிய கட்டப் பொம்மன் சிலையும், முதுகுளத்தூர் தேவர் திருமண மஹால் கட்டப்படும் என கூறினார். 2800 கோடி குடிநீர் தேவைக்கு ஒதுக்கீடு. ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு 2800 கோடியை முதலமைச்சர் ஒதுக்கி கொடுத்துள்ளார். பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இனிமேல் நமது மாவட்டத்திற்கு குடிநீர் பிரச்சனையே இருக்காது. பார்த்திபனூரில் ஒரு பைபாஸ் சாயல்குடியில் ஒரு பைபாஸ் அமைய உள்ளன. பின் தங்கிய முதுகுளத்தூர் தொகுதி என்ற நிலைமாறி முன்னேறிய தொகுதியாக மாறிவருகின்றன. சாயல்குடியில் சாலை. முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது நமது வளர்ச்சியை காட்டுகிறது. நான் மின்சார துறை அமைச்சராக இருந்தபோது 9 மெஹா வாட் மின்சாரம்தான் செல்வானது. தற்போது 19மெஹா வாட் மின்சாரம் செலவாகிறது பரமக்குடியிலும் இமானுவேல் சிலை அமைக்க முருகேசன் எம்எல்ஏ ஏற்பாடு செய்ய வேண்டும். விளையாட்டில் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கக்கூடாது. அனைத்து சமுதாயமும் விரும்பும் ஒரே தலைவராக நமது தளபதி உள்ளார். நான் முதுகுளத்தூர் தொகுதிக்கு மட்டும் அமைச்சர் இல்லை. தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்.மாவடட தேவைகளை முதலமைச்சரிடம் கூறி பெற்றுத் தருகிறேன். நமது மாவட்டத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய முதலமைச்சர் தயாராய் இருக்கிறார்..இவ்வாறு பேசினார்.விழாவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் ஷாஜஹான், 9 வது வார்டு கவுன்சிலர் பால்ச்சாமி ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், பூபதி மணி, ஆறுமுகவேல், குலாம் முஹைதீன், மணலூர் ராமர், வடமலை கிருஷ்ணாபுரம் சேகர், மற்றும் திமுக இளைஞரணியினர் திறனாக கலந்துகொண்டனர்.