சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நரம்பியல் தொழில்நுட்ப பிரிவின் மூலம் உலக மூளை தினத்தை முன்னிட்டு மூளை மற்றும் அதன் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக விம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாரி கொடையரசன் அவர்கள் பங்கேற்றார். துறையின் நரம்பியல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த மாணவர்கள் மேற்கூறிய விழிப்புணர்வை அனைவரும் எடுத்துரைக்கும் வகையில் கல்லூரி சுவரில் இதனை சார்ந்த வரைபடங்களை ஓவியமாக வரைந்தனர்.மேலும் கல்லூரிக்கு அன்பளிப்பாக மூளை மற்றும் முதுகு தண்டுவட மாதிரியை வழங்கினர்.இதனை துறையின் டீன் மற்றும் சிறப்பு அழைப்பாளர் ஆகியோர் திறந்து வைத்து சிறப்பித்தனர்.இதற்கான அனைத்து ஏற்பாட்டினை துறையின் நரம்பியல்தொழில் நுட்ப பிரிவு பொறுப்பாளர் கீதா செய்திருந்தார்.