ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், வளர் இளம் பெண்களுக்கான கல்விகருத்தரங்கு கூட்டம்நடைபெற்றது.கமுதி க்ஷத்திரிய நாடார்பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடுமாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், வளர் இளம் பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு பள்ளியின் நிர்வாக குழு தலைவர் சண்முகராஜ் பாண்டியன், செயலர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.பள்ளியின் தலைமை ஆசிரியை சிந்துமதி அனைவரையும் வரவேற்று பேசினார். கமுதி அரசு மருத்துவமனை தலைமைமருத்துவர் விஜயா,டாக்டர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்டஅலுவலர் முருகேசன்,ஆலோசகர் ஆயிஷாகனி,ஆய்வு கூட நுட்புனர்நாகேஸ்வரன்,  கணினிமதிப்பீட்டு உதவியாளர் ராணி, மூத்த செவிலியர்தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வளர் இளம் பருவத்தினருக்கானபிரச்சனைகளும் அதற்குரிய தீர்வுகளும்குறித்து மாணவியர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். இதில்மாணவிகள் தங்களுடையசந்தேகங்களை கேட்டுதெரிந்து கொண்டனர்.

.