தேவையான பொருட்கள்
கேழ்வரகு – 1 கப் இட்லி அரிசி – 1 கப் உளுந்து – அரை கப் வெந்தயம் – 1 டீஸ்பூன் ஜவ்வரிசி – 5 டீஸ்பூன் உப்புபு – தேவையான அளவு
செய்முறை கேழ்வரகு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும். ஜவ்வரிசியை தனியாக ஊற வைக்கவும். இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து 7 மணிநேரம் புளிக்க விடவும். தட்டு இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும். இப்போது சூப்பரான சத்தான தட்டு இட்லி ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள காரசட்னி, தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.