திருச்சி திருவெறும்பூர் அருகே சர்க்கார்பாளையம் கல்லணை ரோட்டில் பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சூரியகுமார் என்ற 23 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி நடு கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் மகன் சூர்யா (23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் ஆகிய இருவரும் மாலை குவளைக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு பிறகு மீண்டும் இரவு 10 மணி அளவில் வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கில் குவளைக்குடியிலிருந்து சர்க்கார்பாளையம் சாலையில் திரும்பும்போது சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குவளைக்குடிக்கு சென்றுகொண்டிருந்த மினி பேருந்து மீது சூர்யா ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது இதில் பைக் ஓட்டி வந்த சூர்யா தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த அவரது நண்பர் கருணாகரன் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் உயிரிழந்த சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.